ஏரி- குளங்கள் போன்றவற்றில் அலைகள் காணப்படுவதில்லை ஏன்...?
17 வைகாசி 2013 வெள்ளி 17:35 | பார்வைகள் : 15273
நிலவின் ஈர்ப்பு விசையின் (moon’s gravitational force) காரணமாக பூமியில் அமைந்துள்ள கடல்களில் அலைகள் உண்டாகின்றன. உண்மையில் நிலவின் ஈர்ப்புஆற்றல் நிலம், மலை போன்ற அனைத்தையும் கவர்ந்திழுக்கிறது;
நிலையாகவும்உறுதியாகவும்அமைந்திருப்பதால் அவை அசைந்து கொடுப்பதில்லை. ஆனால் கடல்களின்நிலைமை வேறானது; நிலவின் ஈர்ப்பு விசையால் நிலத்தில் அமைந்துள்ள பெரும் கடல்பகுதியின் நீர் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்கு இடம் பெயர முடிகிறது. இவ்விடப்பெயர்ச்சியே அலைகளாகக் காட்சியளிக்கின்றன.
ஆனால் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுள்ள நீரின் பரப்பும் கன அளவும் கடலோடுஒப்பிடுகையில் மிக மிகக் குறைவாக இருப்பதால், கடலில் ஏற்படுவது போன்று அலைகள் உண்டாக முடிவதில்லை.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025