Paristamil Navigation Paristamil advert login

வரிக்குதிரைகள் வாழ்க்கைமுறை

வரிக்குதிரைகள் வாழ்க்கைமுறை

7 வைகாசி 2013 செவ்வாய் 12:06 | பார்வைகள் : 17019


 வரிக்குதிரைகள் மேயும்போது, எல்லாம் ஒரே திசையில் திரும்பியபடி இருக்கும். ஆனால், அவற்றில் ஒன்றுமட்டும் எதிர்திசையில் திரும்பி, பின்பக்கமாக ஏதாவது ஆபத்து வருகிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கும்.

 
காட்டில் தனியாக ஒரு வரிக்குதிரைமட்டும் மேய வேண்டியிருந்தால், அது தனக்குத் துணையாக 'காங்கோனிஸ்'
என்னும் மானைச் சேர்த்துக்கொள்ளும்.
 
வரிக்குதிரை ஓய்வெடுக்கும்போது, அந்த மான் நின்றபடியே சுற்றுமுற்றும் கவனித்துக்கொண்டிருக்கும். ஆபத்து வரும்போல் தெரிந்தால், எச்சரிக்கை செய்து, வரிக்குதிரையை எழுப்பிவிடும்.
 
வரிக்குதிரையின் உடலில் ஒரு பக்கம் இருக்கிற வரிகள், அதே அமைப்பில், சிறிதும் மாறாமல் அப்படியே மறுபக்கமும் இருக்கும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்