இரவு நேரங்களில் மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?

29 கார்த்திகை 2012 வியாழன் 10:10 | பார்வைகள் : 14202
பகல் நேரங்களில் மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு பாதிப்பு ஏற்படாது.
ஆனால், இரவில் மரங்களும் காற்றிலுள்ள பிராண வாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு, சுவாசிக்கத் தேவையான அளவுக்கு வேண்டிய பிராண வாயு கிடைக்காது. கரியமில வாயுவையே சுவாசிக்க நேரும். அதனால், இரவில் மரத்தடியில் படுப்பவரின் உடல்நலம் பாதிக்கப்படும்.