Paristamil Navigation Paristamil advert login

மிகப் பெரிய பறவை, மிகச் சிறிய பறவை உங்களுக்குத் தெரியுமா?......

மிகப் பெரிய பறவை, மிகச் சிறிய பறவை உங்களுக்குத் தெரியுமா?......

11 புரட்டாசி 2012 செவ்வாய் 12:56 | பார்வைகள் : 11406


 நெருப்புக்கோழிதான் நிலத்தில் வாழும் பறவைகளில் மிகப் பெரியது. இது 6 அடி முதல் 8 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் எடை சுமார் 90 கிலோ.

 நெருப்புக்கோழி தென்ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இது மணல் பிரதேசங்களில் ஒட்டகத்தைப் போல வேகமாக ஓடும். கால்களில் இரண்டு விரல்கள் மட்டுமே கொண்ட இந்தப் பறவை, மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. எதிரிகளிடம் இருந்து எளிதாகத் தப்பிவிடும். நெருப்புக்கோழியின் ஆயுட்காலம் 35 ஆண்டுகள்.
 
நெருப்புக்கோழி தான் உண்ட பழங்கள், கொட்டைகள் போன்றவற்றைச் செரிப்பதற்காக ஆணிகளையும், இரும்புத் துண்டுகள், கற்கள் போன்றவற்றையும் விழுங்கும். ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே முட்டையிடும். நெருப்புக்கோழியின் ஒரு முட்டை, 24 சாதாரண கோழி முட்டைகளின் எடைக்குச் சமம். இது 18 செ.மீ. நீளமும், 16 செ.மீ. அகலமும் இருக்கும். ஒன்றரை கிலோ எடை கொண்டது.
 
பெண் நெருப்புக்கோழியானது மணலில் குழி தோண்டி அதைச் சுற்றிலும் கற்களை அடுக்கும். அதில் முட்டைகளை பகலில் பெண்ணும், இரவில் ஆணும் அடைகாக்கின்றன. முட்டையிலிருந்து வெளியே வரும் குஞ்சு நாம் வீட்டில் வளர்க்கும் கோழி அளவு இருக்கும். நெருப்புக்கோழி குஞ்சு பெரிதாக வளர 3 ஆண்டுகள் ஆகும்.
 
நம்மூரில் மாடுகளை வண்டிகளில் பூட்டி மாட்டுப் பந்தயம் வைப்பதைப் போல, தென்ஆப்பிரிக்காவில் நெருப்புக்கோழியை சிறிய வண்டியில் பூட்டி நெருப்புக்கோழிப் பந்தயத்தை நடத்துகிறார்கள். அதில் வெற்றி பெறும் நெருப்புக்கோழியின் உரிமையாளருக்குப் பரிசுத் தொகை வழங்குகிறார்கள்.
 
மிகச் சிறிய பறவை
 
 
 
உலகிலேயே மிகச் சிறிய பறவை கிïபா நாட்டில் உள்ளது. `மெல்லிஸிகா ஹெலனே' என்ற சிங்காரத் தேன்சிட்டுதான் அது.
 
அப்பறவையின் எடை வெறும் 2 கிராம்தான். நீளம், பறவையின் அலகிலிருந்து வாலின் நுனி வரை 2 அங்குலம். இந்த இனத்தில் பெண் பறவையை விட ஆண் பறவை கால் அங்குலம் சிறியது. இந்தக் கணக்குப்படி பார்த்தால் உலகின் மிகச் சிறிய பறவை மெல்லிசிகா ஹெலனே ஆண் பறவைதான். இது வேகமாக இறக்கைகளை அடிக்கும் தன்மை கொண்டது. ஒரு நொடிக்கு 80 தடவைகள் இது இறக்கையை அடிக்கும். அப்போது `விர்ர்ர்' என்ற மெல்லிய சத்தம் மட்டும் கேட்கும். ஆண் பறவையும், பெண் பறவையும் எப்போதும் தனித்தனியாகவே பறக்கும். ஆண்- பெண் இனச்சேர்க்கை சில நொடிகளில் முடிந்துவிடும். இந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஒன்றையொன்று கண்டுகொள்ளாது.
 
இந்தப் பறவைகள், சிலந்தியின் வலையைக் கொண்டு மரக்கிளையில் சிறியதாகக் கூடுகளைப் பின்னிக்கொள்ளும். அவை, சின்னக் குழந்தைகள் வைத்து விளையாடும் சிறிய சொப்புப் பொருட்கள் அளவுக்குத்தான் இருக்கும்.
 
இந்தப் பறவை எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் இவற்றுக்கு அடிக்கடி உணவு தேவைப்படும். மிகச்சிறிய சிலந்திகளும், ஈக்களும்தான் இதன் உணவு. ஆனால் இதற்கு மிகவும் பிடித்த உணவு தேன்தான். எனவே இவை மலர்களைத் தேடி எவ்வளவு தூரமும் சளைக்காமல் பறக்கும்.
 
இவ்வளவு அதிசயமாகத் திகழும் இந்தச் சிறிய பறவை, உலகில் கிïபா நாட்டில் மட்டுமே உள்ளது. அங்கும் இவற்றின் எண்ணிக்கை வெகு விரைவாகக் குறைந்துவருவது கவலைக்குரியது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்