மாடு அசை போடுவது ஏன்?
11 ஆவணி 2012 சனி 12:54 | பார்வைகள் : 11657
தற்போது வீடுகளில் மாடுகள் வளர்க்கப்படு கின்றன. ஆனால், மனித நாகரீகம் வளர்வதற்கு முன் காடுகளிலேயே அவை வாழ்ந்து வந்தன. பல்வேறு வகையான விலங்கினங்கள் வாழ்ந்து வந்த காட்டில், வலிமை குறைந்த விலங்கான மாடுகளுக்கு எதிரிகள் அதிகம் இருந்தன. இத னால் அவை இரை உண்ணும்போது நன்கு மென்று தின்ன முடியாது.
எதிரி விலங்கு எப்போது தாக்க வருமோ என்ற பயத்துடன் அவசர அவசரமாக உணவை விழுங்கும். பின்னர் நேரம் கிடைக்கும்போது அந்த உணவை மறுபடியும் வாய்க்கு கொண்டு வந்து, நன்றாக மென்று தின்னும். இதற்காக இயற்கையிலேயே அவைகளுக்கு சிறப்பு இரைப்பை அமைப்பு உள்ளது. மாடு மட்டுமின்றி ஆடு, ஒட்டகம், மான் போன்ற பாலூட்டிகளும் அசை போடும் தன்மையுடையன.