Paristamil Navigation Paristamil advert login

ஏன் மழைத்துளிகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன தெரியுமா உங்களுக்கு?

ஏன் மழைத்துளிகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன  தெரியுமா உங்களுக்கு?

24 ஆடி 2012 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 13473


 மழைத்துளிகள் என்றாலே ஒரு வித பரசவம் மனதில் எழுவது இயல்பு. இயற்கை அன்னையின் அந்த சவரில் (shower) குளிக்க விரும்பாத ஜென்மங்களே இருக்க முடியாது எனலாம்.

 
அந்த மழைத்துளிகள், வளிமண்டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக் குறைவால்.. தூசித்துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் மேலும் குளிர்ச்சியடையும் போது நீர்த்துளிகளாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பூமியை நோக்கி விழுகின்றன.
 
அவ்வாறு விழும் நீர்த்துளிகள் கோளமாக வெவ்வேறு அளவுகளில் இருப்பதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே காணலாம். ஏன் அவை அப்படி இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகளும் ஆராயத் தவறவில்லை.
 
வளிமண்டலத்தில் உள்ள காற்றின் கூறுகள் மழைத்துளிகளின் பூமி நோக்கிய இயக்கத்தை எதிர்ப்பதால் மழைத்துளிகளுக்கும் காற்றுத் துணிக்கைகளுக்குமிடையே உராய்வு உருவாகி ஒன்றின் பயணத்தை மற்றையது இடையூறு செய்ய முற்படுவதால் அந்த உராய்வைக் குறைக்கும் நோக்கோடு மழைத்துளிகள் சாத்தியமான சிறிய மேற்பரப்பை உருவாக்கும் வகையில் கோள அமைப்பைப் பெறுவதாகவும் இதற்கு நீரின் மேற்பரப்பு இழுவிசை (Surface tension) உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
 
அப்போ ஏன் மழைத்துளிகள் ஒரு சீராக இன்றி வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன என்று கேட்டால் அதற்கு மழைத்துளிகள் விழும் போது ஒன்றை ஒன்று முட்டி மோதி சேர்வதும் பிரிவதும் நிகழ்வதால் அவற்றின் பருமன் மாறுபடுகின்றன என்றும் கூறினர் விஞ்ஞானிகள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்