Paristamil Navigation Paristamil advert login

மாணவனிடம் சிக்கி சின்னாபின்னமான ஆசிரியர்

மாணவனிடம் சிக்கி சின்னாபின்னமான ஆசிரியர்

5 ஆடி 2022 செவ்வாய் 18:20 | பார்வைகள் : 19988


கணக்கு வாத்தியார்: (மாணவனிடம்) ராமு இங்க வா... நான் உன்கிட்ட முதல்ல 2 பேனா கொடுக்கிறேன். அடுத்தது திரும்பவும் 2 பேனா கொடுக்கிறேன். அப்டின்னா உன்கிட்ட இப்ப எத்தனை பேனா மொத்தம் இருக்கும்?
 
ராமு: ஐந்து பேனா இருக்குது சார்.
 
கணக்கு வாத்தியார்: நான் சொன்னத ஒழுங்க கவனிச்சியா இல்லையா? முதல்ல 2 பேனா கொடுத்தேன். அப்றம் மீண்டும் 2 பேனா தந்தேன். இப்ப உன்கிட்ட எத்தனை பேனா இருக்கு? கரெக்டா சொல்லு பார்ப்போம்...
 
ராமு: இப்பவும் 5 பேனாதான் சார்..
 
கணக்கு வாத்தியார்: (கடுப்புடன்) அடிவாங்கப்போற.. சரி உன் வழிக்கே வரேன். முதல்ல 2 சாக்லேட் கொடுக்கிறேன் அடுத்தது திரும்பவும் 2 சாக்லேட் கொடுக்கிறேன். அப்டின்னா உன்கிட்ட இப்ப எத்தனை சாக்லேட் இருக்கும்?
 
ராமு: 4 சாக்லேட்
 
கணக்கு வாத்தியார்: குட் பாய்.. இப்ப திரும்பவும் வரேன்.. நான் உன்கிட்ட 2 பேனா கொடுக்கிறேன். அடுத்தது திரும்பவும் வேற 2 பேனாக்கள தரேன். அப்டின்னா இப்ப எத்தனை பேனா மொத்தமா இருக்குது?
 
ராமு: 4 தான் சார்..
 
கணக்கு வாத்தியார்: அடேய் ஏன்டா உசுற வாங்குற.. சாக்லேட் மட்டும் 4 வருது, பேனா எப்டிடா 5 வரும்?
 
ராமு: சார், என் கிட்ட ஏற்கனவே ஒரு பேனா இருந்ததால ஐந்துன்னு சொன்னேன். சாக்லேட் எதுவும் இல்லாததால 4 அப்டின்னு சொன்னேன்.
 
கணக்கு வாத்தியார்: சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. கெளம்பு...

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்