ஆட்டின் எடை
30 ஆனி 2023 வெள்ளி 02:37 | பார்வைகள் : 8985
அக்பர் ஒருநாள் கோபத்துல பீர்பால பக்கத்து நாட்டுக்கு நாடுகடத்திட்டாரு ,கொஞ்ச நாள் கழிச்சு அக்பரோட கோபம் தனிஞ்சது ,உடனே பீர்பால தேடி பாத்தாரு அந்த நாட்டுல.
ஆனா யாராலயும் பீர்பால கண்டுபிடிக்க முடியல ,உடனே ஒரு யோசனை வந்துச்சு அக்பருக்கு ,உடனே அரண்மனைல இருக்குற எல்லாருக்கும் ஒரு ஆடு பரிசா கொடுத்தாரு
இந்த ஆடுகளோட எடை என்னனு எனக்கு தெரியும் ,ஒருமாசம் கழிச்சி இத கொண்டுவாங்க ,ஆனா இந்த ஆடுகளோட எடை குறையவோ ,அதிகரிக்கவோ கூடாதுனு சொன்னாரு அக்பர்
ஆடு வாங்குன எல்லாருக்கும் ஒரே குழப்பமா இருந்துச்சு ,ஒரு மாசம் கழிச்சி அந்த ஆடுகளை எல்லாம் அரண்மனைக்கு கொண்டுவர சொல்லி அளந்து பார்த்தாரு அக்பர் ,எல்லா ஆடுகளும் ஒன்னு எடை குறைஞ்சு இருந்துச்சு இல்ல எடை அதிகமா இருந்துச்சு ,ஆனா ஒருத்தரோட ஆடு மட்டும் அதே எடையில இருந்துச்சு
அவரை கூப்பிட்டு எப்படி ஆடு எடை அதே அளவுல இருக்குனு கேட்டாரு ,அரசே எனக்கு ஒரு சாமியார் யோசனை சொன்னாரு
அதுபடி ,காலைல முழுசும் ஆட்டுக்கு சாப்பாடு கொடுப்பேன் அதனால அதோட எடை குறையவே குறையாது ,ராத்திரி புலிக்கு பக்கத்துல கட்டி போற்றுவேன் ,பயத்துல அதோட எடை கூடவே கூடாதுனு சொன்னாரு
உடனே எல்லாரும் அந்த சாமியார பார்க்க போனாங்க ,
அந்த சாமியார பார்த்த உடனே அக்பர் சொன்னாரு ,பீர்பால் எப்ப நான் நாடுகடத்துனாலும் வேற நாட்டுக்கு போகாம இங்கயே ஏன் மாறு வேசத்துல சுத்திகிட்டு இருக்கீங்கன்னு கேட்டாரு
உடனே அந்த சாமியார் வேசத்துல இருந்த பீர்பால் தன்னோட வேஷத்தை கலைச்சிட்டு அக்பர் கூட அரண்மனைக்கு வந்தாரு