Paristamil Navigation Paristamil advert login

விமானத்தில் சென்ற குரங்கு...

 விமானத்தில் சென்ற குரங்கு...

18 மாசி 2023 சனி 12:12 | பார்வைகள் : 7105


ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று ஒரு குரங்கைத் தவிர வேறு
 
யாருமே உயிர் பிழைக்கவில்லை.. திருவாளர் மெனாங்கு துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..
 
திருவாளர் மெனாங்குக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..
 
திருவாளர் மெனாங்கு ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?
 
குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..
 
மெனாங்கு ; பணிப் பெண்கள்..?
 
குரங்கு ; பெல்ட் போட உதவினார்கள்..
 
மெனாங்கு ; விமானிகள்.. ?
 
குரங்கு ; விமானத்தை கிளப்பினார்கள்..
 
மெனாங்கு ; நீ என்ன செய்தாய்..?
 
குரங்கு ; வேடிக்கை பார்த்தேன்..
 
மெனாங்கு ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?
 
குரங்கு ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. 
 
விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..
 
மெனாங்கு ; நீ என்ன செய்தாய்..?
 
குரங்கு ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!
 
மெனாங்கு ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?
 
குரங்கு ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..
 
மெனாங்கு ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?
 
குரங்கு ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்