Paristamil Navigation Paristamil advert login

வாங்க சிரிக்கலாம்

 வாங்க சிரிக்கலாம்

14 மாசி 2023 செவ்வாய் 11:04 | பார்வைகள் : 10645


 
கடவுள் ஒரு நாள் ஏதோ ஆசையில் ஒரு பாருக்குள் நுழைந்தாராம்.
 
ஏகப்பட்ட வகைகள் இருக்கவும் விற்பனையாளர் இவர் கெட் அப் பார்த்து விட்டு "என்ன வேண்டும்?" என்றார்.
 
"நல்லதா ஏதாவது குடுப்பா" என்று சொல்ல ஒரு ஃபுல் எடுத்து தந்தார்.
 
ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு அடுத்து என்றார்
 
இன்னொரு புல் தர அதையும் குடித்து விட்டு அடுத்து என்றார்.
 
இதே போல பத்து முறை குடிக்க பார்டெண்டருக்கே கை வலித்து விட்டது.
 
கடவுள் கொஞ்சமும் சலிக்காமல் அடுத்து என்றார்.
 
பார்டெண்டருக்கு ஆச்சர்யம்,"இவ்ளோ அடிச்சும் கொஞ்சமும் உளரல,குரல் பிசிறாம அடுத்துங்கிறீங்களே,உங்களுக்கு மப்பு ஏறவே இல்லயா?"
 
கடவுள் பெருமிதமா,"நாந்தாம்ப்பா கடவுள் எனக்கு எப்படி மப்பு ஏறும்"னாரு
 
உடனே பார்டெண்டர்,"சரி சரி மப்பு ஓவராவே ஏறிடுச்சு போல"

வர்த்தக‌ விளம்பரங்கள்