Paristamil Navigation Paristamil advert login

காது கேட்காத மனைவி...!

 காது கேட்காத மனைவி...!

8 மாசி 2023 புதன் 09:21 | பார்வைகள் : 10086


 
ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை.
நீங்க தான் வைத்தியம் பார்க்கணும்
 
டாக்டர்: எவ்வளவு தூரத்திலிருந்து பேசினா கேக்க மாட்டேங்கறதுன்னு சொல்லுங்க.
அதுக்கு தகுந்த மாதிரி வைத்தியம் பார்க்கலாம.
 
வீடு திரும்பிய அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தள்ளி நின்று ” டார்லிங்
ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்கற” என்று கேட்டான். 
 
மனைவியிடமிரந்து பதில்
வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். 
 
அப்படியும் பதில் வராததால்
30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே
கேள்வியை கேட்டான். 
 
மனைவி திரும்பி ” இதோட ஐந்தாவது தடவையா சொல்லிட்டேன்
ராத்திரிக்கு சிக்கன் சமைச்சுக்கிட்டு இருக்கேன்” என்றாள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்