இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
10 ஆடி 2023 திங்கள் 10:32 | பார்வைகள் : 10988
இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 151,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் 22 கரட் தங்கத்தின் விலை 147,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 164,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் 24 கரட் தங்கத்தின் விலை 160,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


























Bons Plans
Annuaire
Scan