Paristamil Navigation Paristamil advert login

அது வேறு யாரும் இல்ல! உங்க உருவம்தான்!!

அது வேறு யாரும் இல்ல! உங்க உருவம்தான்!!

13 கார்த்திகை 2019 புதன் 14:37 | பார்வைகள் : 14319


சர்தார்ஜி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். 

 
அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.
 
இப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.
 
"அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு "இங்கே யாருமே இல்லையே" என்று சர்தார்ஜியை பார்த்து.
 
"அப்படியா! எங்கே நகருங்கள் நான் பார்க்கிறேன். என்ன சார் அங்கே பாருங்க நிக்கறான்"
 
"அது வேறு யாரும் இல்லைங்க! கண்ணாடியில் உங்க உருவம்தான் தெரியுது!" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்