மாமனாருக்கு மருமகன் எழுதிய கடிதம்
30 தை 2021 சனி 08:11 | பார்வைகள் : 10019
அன்புள்ளம் கொண்ட மாமா,
திருமணம் முடிந்ததில் இருந்து தாங்கள் எங்களை கண்டுகொள்வதே இல்லை...
நமது கலாச்சாரம், மரபு ஆகியவற்றை நீங்கள் மறந்து விட்டீர்கள். பரவாயில்லை...
இப்பவும் நான் ஆடி சீர் வரிசை செய்முறை எதுவும் தங்களிடம் எதிர்பார்க்கவில்லை. இனியும் எப்போதும் எனக்கு வேண்டாம். ஆனால், தயவு செய்து நம் முன்னோர்கள் சொன்னபடி ஆடி மாசம் பிறந்த காரணத்தால் ஒரு மாதம் தங்கள் மகளை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
ஆடி பிறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. எனவே காலதாமதம் செய்யாமல், எனது சேதாரத்தை தவிர்க்க, புயல் போல் புறப்பட்டு வந்து, உங்கள் சூறாவளியை அழைத்து செல்லவும்... மற்றவை நேரில்.
இப்படிக்கு,
மருமகன்
பொதுவாக ஆடிமாதத்தில் புது மணத்தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்தால், அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தைகள் பிறக்கும். அப்போது வெயில் மிக உக்கிரமாக இருக்கும் என்றும்அக்னி நட்சத்திரமாக அமையும் என்றும் புது மணத் தம்பதி பிரிக்கப்படுவதாக ஜோதிடம் கூறுகிறது. ஆனால், இந்த மாப்பிள்ளைக்கோ அந்த நடைமுறையை பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. ஒரு மாதம் முழுவதும் மனைவியின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க முயல்வது போல தெரிகிறது. ஆடி மாதத்தில் புது மண தம்பதிகள் பிரிக்கப்படுவது சிலருக்கு பிடிக்காவிட்டாலும் சிலருக்கு வரம் தான் போல...