Paristamil Navigation Paristamil advert login

வரிசையில் போய் நில்லுங்கள்...!!

வரிசையில் போய் நில்லுங்கள்...!!

11 தை 2018 வியாழன் 12:10 | பார்வைகள் : 11704


ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப்
பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,
 
அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார்.
 
இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண
ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்.
 
ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும்
சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”
 
“முதலில் செல்வது எனது மனைவி.”
 
“என்ன ஆயிற்று அவருக்கு?”
 
“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”
 
“இரண்டாவது பிணம்?”
 
“அது என் மாமியாருடையது. என் மனைவியைக்
காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”
 
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
“இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”
 
அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய்
நில்லுங்கள்”!!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்