மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?
2 மாசி 2015 திங்கள் 10:19 | பார்வைகள் : 9136
பாபு தனது பர்ஸில் அவனது மனைவி போட்டோவை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தான் நண்பன் கோபு. இருக்காதா பின்ன... எப்போ பார்த்தாலும், மனைவியை குறை சொல்லும் பாபு, பர்ஸில், பாசமா, பொண்டாட்டி போட்டோவை வைத்திருந்தால் கோபுவுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும். பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய் திறந்தும் கேட்டே விட்டான்
கோபு. "டேய்... பொண்டாட்டிய வெளியில கரிச்சு கொட்ட வேண்டியது, உள்ளுக்குள்ள பாசமா கொஞ்ச வேண்டியது.. நல்லா இருக்குடா உன் நாடகம்" என்றான் சற்று கோபத்துடனே.. இப்போது பாபுவுக்குதான் உண்மையிலேயே அதிர்ச்சி. "ஏன்டா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. நான் என் பொண்டாட்டிய கொஞ்சுனத நீ எப்போ பார்த்த.." என்னான் பாபு. "
அதான்.., உன் பர்சுக்குள்ள பொண்டாட்டி போட்டோவ வச்சிருக்கிய... நான் பார்த்துட்டேன். மறைக்காத.. பாசமில்லாமலா, பர்சுக்குள்ள வச்சிருப்ப" என்றான் கோபு.
பாபு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டு சென்னான்.., "டேய் மடச்சாம்பிராணி, இதுக்குத்தான் இந்த பில்டப்பு கொடுத்தியா..? அது வேறு ஒன்னுமில்லடா.. நான் ஒரு செலவாளின்னு உனக்கு நல்லா தெரியும். பர்ஸுக்குள்ள என் பொண்டாட்டி போட்டோ இருந்திச்சின்னா, அந்த மூஞ்ச பாக்கணுமேன்னு, பர்ஸை திறக்கவே பயப்படுவேன். காசு மிச்சசம். இதுக்குத்தான்டா இந்த ஐடியா" என்றானே பார்க்கலாம்.