பேசாம செத்துப் போங்க..எனக்கு நிறைய வேலை இருக்கு!
17 தை 2015 சனி 11:09 | பார்வைகள் : 14212
உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரின் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...." எனத் தெரிவித்தார் டாக்டர்.
மாலை 5 மணி : வீட்டிற்குத் திரும்பிய கணவர், கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்டு அழுது துடித்தார் மனைவி.
மாலை 6 மணி : எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு எனக் கேட்டார் கணவர். மனைவியும் செய்து கொடுத்தார்
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... என்றார் கணவர். மனைவியும் கணவரின் ஆசையை நிறைவேற்றினார்.
இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!! என ஆசையாகக் கேட்டார் கணவர். மனைவியும் அது மாதிரியே செய்து கொடுத்தார்.
இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான். அதற்கு மனைவி, ‘பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..... உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!!' எனக் கூறியபடியே திரும்பிப் படுத்துக் கொண்டார்.
கணவர் : ??!!!??

























Bons Plans
Annuaire
Scan