Paristamil Navigation Paristamil advert login

என்ன கொடுமைச் சார் இது....

என்ன கொடுமைச் சார் இது....

18 ஐப்பசி 2014 சனி 12:44 | பார்வைகள் : 9541


 ஜவுளிக்கடை கதவை உடைத்து திருடியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டான் குற்றவாளி.

நீதிபதியும், குற்றவாளியும் பேசிக் கொள்வதைப் பாருங்கள்....
 
நீதிபதி: திருட்டை ஒத்துக் கொள்கிறாயா...?
 
திருடன்: ஆமாம் யுவர் ஆனர்...
 
நீதிபதி: உனக்கு சிறைத் தண்டனை அளிப்பதற்கு முன் நீ ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்து...
 
திருடன்: கூறுங்கள் யுவர் ஆனர்...
 
நீதிபதி: நீ அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து திருட முயன்றதாக உன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது உண்மையா..?
 
திருடன்: ஆமாம் யுவர் ஆனர்...
 
நீதிபதி: எதற்காக மூன்று கடைகளில் திருட முற்பட்டாய்... அப்படி எத்தனை உடைகளைத் திருடினாய்...?
 
திருடன்: ஒன்றே ஒன்று தான் திருடினேன்...
 
நீதிபதி: ( ஆச்சர்யத்துடன்...) மூன்று கடைகளை உடைத்தும் ஒரே ஒரு உடை தான் திருடினாயா...?
 
திருடன்: ஆமாம்...
 
நீதிபதி: ஏன்..?
 
திருடன்: ஒவ்வொரு கடையா புகுந்து ஒவ்வொரு டிரஸ்ஸா செலக்ட் பண்ணி கொண்டு போய் என் மனைவி கிட்ட காண்பிச்சேன்... ஆனா, அவளுக்கு 3வது கடையில் எடுத்த டிரஸ் தான் புடிச்சிருந்துச்சாம் யுவர் ஆனர்....

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்