நீயெல்லாம் நல்லா வருவடா கண்ணா!!
21 புரட்டாசி 2014 ஞாயிறு 18:59 | பார்வைகள் : 9673
அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் அப்பா, பக்கத்து வீட்டில் கூட்டமாக மக்கள் இருப்பதைக் காணுகிறார்.
என்ன விசேஷமாக இருக்கும் என யோசித்துக் கொண்டே வந்தவர், எதிர்ப்படும் தனது 10 வயது மகனிடம் கேட்கிறார் அது குறித்து.
அவர்களின் உரையாடலைப் பாருங்கள்...\
அப்பா : பக்கத்து வீட்டுல ஒரே கூட்டமா இருக்கே என்ன விஷேசம்...?
மகன் : பிறந்தநாள் விழானு நினைக்கிறேன்...
அப்பா : அப்படியா...யாருடைய பிறந்தநாள்....
மகன் : டூயூவின் பிறந்தநாளாம்....
அப்பா : டூயூவா... நாம் கிட்டத்தட்ட பல வருடங்களாக இங்கு குடியிருக்கிறோம். ஆனால், டூயூ என்ற பெயரில் அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே...
மகன் : எனக்கு அதெல்லாம் தெரியாதுப்பா...ஆனால், இன்று டூயூவின் பிறந்தநாள் என்பது மட்டும் உறுதி...
அப்பா : எப்படி, டூயூவின் பிறந்தநாள் என இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்...
மகன் : இப்போது தான் அவர்கள் அனைவரும் கோரஸாக ஒரு பிறந்தநாள் வாழ்த்துப் பாடினார்கள் அதை வைத்துத் தான் கூறுகிறேன்...
அப்பா : என்ன பெயர் கூறி பாடினார்கள்...
மகன் : ஹேப்பி பர்த்டே டூயூ... ஹேப்பி பர்த் டே டூயூ...
( ‘என்ன ஒரு புத்திசாலித் தனம்.... நீயெல்லாம் நல்லா வருவடா கண்ணா' என மனதுக்குள் நினைத்துக் கொண்டார் அப்பா. )