என்னக் கொடுமை சார் இது..?
17 புரட்டாசி 2014 புதன் 12:03 | பார்வைகள் : 10338
ராமு ரயில்வே வேலை ஒன்றிற்காக இண்டர்வியூக்கு சென்றிருந்தான்.
அப்போது அங்கே கேட்கப் பட்ட கேள்விகளும், அதற்கு ராமு தந்த பதில்களும்....
ஆபிசர்: தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் காண்கிறீர்கள். எதிரே ஒரு ரயில் வந்து கொண்டிருக்கிறது. அப்போது என்ன செய்வீர்கள்..?
ராமு: உடனடியாக சிவப்புக் கொடிய ஆட்டி ரயிலை நிறுத்த முயற்சி செய்வேன் சார்...
ஆபிசர்: சிவப்புக் கொடி இல்லை, அப்போது என்ன செய்வீர்கள்?
ராமு: இரவு நேரமானால், டார்ச் அடித்து சிக்னல் காட்டுவேன்...
ஆபிசர்: கையில் டார்ச்சும் இல்லை, அப்போது என்ன செய்வீர்கள்?
ராமு: என்னுடைய சிவப்புச் சட்டையைக் கழட்டி கொடியாகப் பயன் படுத்துவேன்...
ஆபிசர்: அன்று நீங்கள் சிவப்பு கலர் சட்டை அணியவில்லை என்றால்...?
ராமு: உடனடியாக என் சித்தப்பாவிற்கு போன் செய்வேன்...
ஆபிசர்: ஏன் உங்கள் சித்தப்பா அவ்வளவு பெரிய ஜாம்பவானா... ரயிலைக் கைகளாளேயே தடுத்து நிறுத்தி விடுவாரோ..?
ராமு: அதெல்லாம் இல்லை சார்?
ஆபிசர்: பின் எதற்காக உங்கள் சித்தப்பாவிற்கு போன் செய்வீர்கள்..?
ராமு: அவர் இதுவரை ரயில் விபத்தை நேரில் பார்த்ததில்லையாம்... அதான் சார்!!!!