அப்டி என்ன முக்கியமான பார்சல் மேடம்...?
14 புரட்டாசி 2014 ஞாயிறு 10:35 | பார்வைகள் : 9449
போஸ்ட் ஆபிசிற்கு வந்த பெண் ஒருவர், அங்குள்ள உயரதிகாரியைச் சந்தித்து குற்றச்சாட்டு ஒன்றை முன் வைக்கிறார்.
அப்படி என்ன அவர் கூறினார் தெரியுமா....
போஸ்ட்மேன், கதவைத் தட்டி பார்சலைக் கொடுக்காமல் ‘போஸ்ட் ஆபிசில் வந்து பெற்றுக் கொள்ளவும்'னு எங்க வீட்டுக் கதவுல பேப்பர்ல எழுதி ஒட்ட வச்சுட்டு வந்துட்டாரு...
அதிகார் : அப்படியா...
பெண் : ஆமாம். என் கணவர் எப்போதுமே வீட்டிலேயே தான் இருப்பார். அவரிடம் பார்சலைக் கொடுத்திருக்கலாமே...
அதிகாரி : போஸ்ட்மேன் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரியவில்லையே....
அதிகாரி : சரி மேடம், இது குறித்து நான் விசாரிக்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா...?
பெண் : கேளுங்கள்....
அதிகாரி : நீங்களே இவ்வளவு அவசரமாக பார்சலை வாங்க வந்துள்ளீர்களே, இது அவ்வளவு முக்கியமான பார்சலா...?
பெண் : ஆமாம்...
அதிகாரி : அப்படி இதில் என்ன இருக்கிறது என நான் தெரிந்து கொள்ளலாமா....?
பெண் : நிச்சயமாக, இதில் ரிப்பேர் சரி செய்வதற்காக அனுப்பப் பட்ட என் கணவரின் ஹியரிங் எய்ட் இருக்கிறது. இது இல்லாமல் அவர் மிகவும் சிரமப் படுகிறார்...
( இப்போது புரிகிறதா, போஸ்ட் மேன் எவ்வளவு நேரம் கதவு தட்டியிருப்பார் என்று....)