சாவே வரக்கூடாது...

3 புரட்டாசி 2014 புதன் 06:38 | பார்வைகள் : 13770
ஒரு ஊரில் குப்புசாமி என்ற பெயரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சாகா வரம் பெற வேண்டும் என ஆசை.
உடனடியாக கடவுளிடம் வரம் வேண்டி தவமிருக்கத் தொடங்கினார். குப்புசாமியின் தவத்தால் மனம் மகிழ்ந்த கடவுள் அவர் முன்னே தோன்றினார்.
சாவே வரக்கூடாது...
கடவுள்: பக்தா என்ன வரம் வேண்டும் கேள்?
குப்புசாமி: கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது.
குப்புசாமி ஹேப்பி..
கடவுள்: சரி பக்தா அப்படியே ஆகட்டும்.
குப்புசாமி ரொம்ப சந்தோசமாகி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒருவர் குப்புசாமியிடம் பேச வந்தார்.
குப்புமி....
வழிப்போக்கர்: உங்க பேரு என்ன?
குப்புசாமி: குப்புமி... குப்புமி... குப்புமி...
பாவம், எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை குப்புசாமிக்கு "சா" வே வரலையாம்...
கடவுள் நம்மை விட புத்திசாலிg