இத எப்டி தப்புனு சொல்லுவீங்க...?
13 ஆவணி 2014 புதன் 13:09 | பார்வைகள் : 9812
மாணவன் ஒருவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தான். காரணம் அவன் எல்லா கேள்விகளுக்கும் சரியாகவே பதிலளித்திருப்பதாக நம்பினான்.
ஆனபோதும், அவை அனைத்தும் தவறு என அவனது விடைத்தாளைத் திருத்தியவர் தெரிவித்தார். ஆனால், தான் மிகச் சரியான பதிலை எழுதியதாகவே அம்மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் வாதாடினான்.
சரி, அப்படி அம்மாணவன் என்ன கேள்விக்கு, எப்படி பதில் அளித்தான் எனப் பார்க்கலாமா....
திப்பு சுல்தான்...
கேள்வி: எந்தப் போரில் அரசர் திப்பு சுல்தான் உயிரிழந்தார்.
பதில்: அவரது கடைசிப் போரில்...
சுதந்திரப் பிரமாணம்...
கேள்வி: இந்தியச் சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப் பட்டது?
பதில்: காகிதத்தின் அடிப்பகுதியில்.
திருமணம் தான் காரணம்...
கேள்வி: விவாகரத்திற்கான முக்கியக் காரணம் என்ன ?
பதில்: திருமணம்.
கங்கை பாயும் மாநிலம்...
கேள்வி: கங்கை எந்த மாநிலத்தில் பாய்கிறது?
பதில்: நீர் பாயும் மாநிலத்தில்.
மகாத்மா...
கேள்வி: மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்?
பதில்: அவரது பிறந்தநாளன்று.
ஜூஸ்...
கேள்வி: 8 மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாகப் பிரித்துக் கொடுப்பது?
பதில்: ஜூஸ் போட்டுக் கொடுக்கலாம்.