Paristamil Navigation Paristamil advert login

சொன்னா புரிஞ்சுக்கோங்க டாக்டர்....!

சொன்னா புரிஞ்சுக்கோங்க டாக்டர்....!

28 ஆடி 2014 திங்கள் 08:40 | பார்வைகள் : 9955


 ஒருநாள் இரவு கணவன் ஒருவன் தனது குடும்ப டாக்டருக்கு போன் செய்கிறார்.நள்ளிரவு வேளையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மருத்துவர் தூக்கம் கலையாமல் பேசுகிறார்.

 
கணவன் : டாக்டர் என் வொய்ஃப் ரொம்ப வயிறு வலிக்குதுனு சொல்றா...
 
டாக்டர் : அப்படியா...?
 
கணவன் : ஆமாம் டாக்டர். அவ சொல்ற அறிகுறியை எல்லாம் வச்சுப் பார்க்கும் போது அவளுக்கு அப்பண்டீசா இருக்குமோனு எனக்கு சந்தேகமா இருக்கு...
 
டாக்டர் : என்ன மிஸ்டர் விவரம் இல்லாதவரா இருக்கீங்களே... போன வருசம் தான உங்க மனைவிக்கு அப்பண்டீஸ் ஆபரேஷன் பண்ணினோம். யாருக்காவது ரெண்டாவது தடவை அப்பண்டீஸ் வந்ததுனு கேள்விப் பட்டிருக்கீங்களா.....?
 
கணவன் : (நிதானமாக மீண்டும் அதையே சொல்கிறான்) இல்ல டாக்டர் அவ படுற அவஸ்தையைப் பார்த்தா நிச்சயமா அவளுக்கு அப்பண்டீசா தான் இருக்கும்னு நான் நினைக்குறேன்.
 
டாக்டர் : இம்முறை கோபத்தின் எல்லைக்கே போகிறார்.உனக்கென்ன பைத்தியமா... நான் தான் சொல்கிறேனே ரெண்டாவது முறை அப்பண்டீஸ் வராது என்று.
 
கணவன் : எனக்குப் பைத்தியம் எல்லாம் இல்லை டாக்டர். ஆனபோதும், நான் உறுதியாகச் சொல்கிறேன். என் மனைவி அப்பண்டீஸ் வலியால் தான் துடிக்கிறாள். ஏனென்றால்...
 
டாக்டர் : ஏனென்றால்....?
 
கணவன் : ஏனென்றால் நீங்கள் ஆபரேஷன் செய்தது என் முதல் மனைவிக்கு. இவள் என் இரண்டாவது மனைவி !
டாக்டர் :...?????

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்