Paristamil Navigation Paristamil advert login

சும்ம்ம்மா பேசிக்கிட்டு இருந்தேன்!

சும்ம்ம்மா பேசிக்கிட்டு இருந்தேன்!

29 ஆனி 2014 ஞாயிறு 13:18 | பார்வைகள் : 9729


 நம்பர் 1: ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?


நம்பர் 2: எப்போ?

நம்பர்1: ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி

நம்பர்2: ஓ, அதுவா சார் என் ஹஸ்பெண்ட் தான் கூப்பிட்டார், இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்?

நம்பர்1: யாரு பேசுறதுன்னு தெரியலயே?

நம்பர்2: நான் அவரோட வைஃப் ..என்னை உங்களுக்குத் தெரியாது. என் ஹஸ்பெண்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

நம்பர்1: இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?

நம்பர்2: ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பெண்ட்

நம்பர்1: சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்?

நம்பர்2: அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்

நம்பர்1: சரி எங்கே வர்றாரு?

நம்பர்2: ஆமா எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு

நம்பர்1: ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்

ரூம்லேர்ந்து அவர்,

கணவர்: யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?

நம்பர்2: தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேன்...அந்த நம்பர்லேர்ந்து தான் ஒருத்தர் கூப்ட்டாரு.. ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன்!!
 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்