வேறு ஏதாவது பேசலாம்அன்பே...?
13 ஆனி 2014 வெள்ளி 07:10 | பார்வைகள் : 10014
காதலன்: இன்று காலை என்ன சாப்பிட்டாய் அன்பே...?
காதலி: எப்போது பார்த்தாலும் என்னுடன் சாப்பாட்டை பற்றி மட்டுமே பேசுகிறாயே.. எனக்கு போரடிக்கிறது. வேறு ஏதாவது பேசலாம்....
காதலன்: சரி டியர்.... நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறார்கள்? மலேசிய விமானத்தின் கதி என்னவாகியிருக்கும் என நினைக்கிறாய்...? முண்டே கார் சீட் அணிந்திருந்தால் உயிரிழந்திருக்க மாட்டார் எனக் கூறப்படுகிறதே...? இதைப் பற்றியெல்லாம் நீ என்ன நினைக்கிறாய்?
காதலி: நான் இன்று காலை சாம்பார் இட்லி சாப்பிட்டேன்... நீங்கள்?