மாடு கட்டுவியா மாட்டியா?
13 தை 2016 புதன் 19:23 | பார்வைகள் : 9512
”ஏம்ப்பா, மாடு வாங்கணும்ன்னு லோன் வாங்கறியே கரெக்டா கட்டுவியா?”
“என்ன சார் நீங்க. கட்டல்லைன்னா ஓடிடாதா?, நிச்சயமா கட்டி வைப்பேன் சார்”.
“நான் கேட்டது மாட்டை இல்லை.”
“மாடு இன்னும் வாங்கவே இல்லையே, அதை எப்படிக் கேப்பீங்க.?”
“அப்ப வாங்கினப்புறம் கேட்டா.?”
“வாங்கினப்புறம் கேட்டாலும் மாடு சொல்லாது.”
“மாட்டைக் கேக்கறதுன்னு நான் சொன்னது அதை இல்லை.”
“பின்னே எதை.?”
“மாடு வாங்கினப்புறம் மாட்டைக் கேட்டா குடுத்துடுவியான்னேன்.”
“மாட்டைக் கேட்டா மாடுதான் குடுக்கும். நான் எப்படிக் குடுப்பேன்?”.
”ஐயோ…. சரி.. ஆரம்பிச்ச இடத்துக்கு வருவோமா?
”கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லை.”
“நானும் ஆரம்பிச்ச இடத்துக்கே வரேன். கட்டுவியான்னு என்னைத்தான் கேட்டீங்க.”
“உன்னை ஏன் கட்டணும்.?”
“என்னைக் கேட்டா? நீங்கதானே சொன்னீங்க, கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லைன்னு. அப்ப என்னைன்னுதானே அர்த்தம்?”
“கேட்டது உன்னைத்தான்.”
“அப்படீன்னா ஏன் என்னைக் கட்டணும்ன்னும் நீங்களே சொல்லிடுங்க.”
“கட்டறதுன்னா மாடும், நீயும்தானா?..மூணாவதா ஒண்ணு இருக்கே. அதைக் கட்டுவியா ஒழுங்கா.?”
“மூணாவதான்னா… நீங்கதான் இருக்கீங்க”.!.
“என்னைப் பிடிச்சி கட்டிடு. இல்லைன்னா உன்னைக் கடிச்சாலும் கடிச்சிடுவேன்.”
“அப்பவே சொன்னாங்க அந்த பேங்க் மேனேஜர் ஒரு பைத்தியம்ன்னு.”