அன்புப் பரிசு.....
26 ஆனி 2013 புதன் 11:02 | பார்வைகள் : 15632
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..
" மாமியாரின் அன்புப் பரிசு..
"ரெண்டாவது மருமகனுக்கும்இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.."
மாமியாரின் அன்புப் பரிசாக..
".மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..
மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் HYUNDAI கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட…!


























Bons Plans
Annuaire
Scan