கணவரோட பொழுது போக்குக்கு எப்பவுமே தடை போடக்கூடாது!!
26 சித்திரை 2013 வெள்ளி 09:51 | பார்வைகள் : 10558
ஒரு அழகான பெண் மிகப்பெரிய ஷாப்பிங் மாலுக்கு சென்று ஏராளமான பொருட்களை வாங்கினாள். பணம் கொடுக்கும் இடத்திற்கு போன போது பர்ஸில் இருந்து டிவி ரிமோட் கண்ட்ரோலை எடுத்து மேஜை மீது வைத்தாள்.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கேசியர், எப்பவுமோ, டிவி ரிமோட் உங்க கிட்டதான் இருக்குமா? என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்... இல்லை. இன்னைக்கு என்னோட கணவர் ஐ.பி.எல் மேட்ச் பார்த்துட்டு கடைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டார்.
அதான் ரிமோட்டை எடுத்துட்டு வந்துட்டேன் என்று கூறிக் கொண்டே கார்டை கொடுத்தாள். அதை வாங்கி செக் செய்த கேசியர் எதுவும் பேசாமல் பொருட்களை எடுத்து உள்ளே வைக்கத் தொடங்கினான்.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், என்ன செய்யறீங்க? என்று கேட்கவே. உங்களோட கணவர் கிரெடிட் கார்டை ப்ளாக் செய்துவிட்டார். அதனால நீங்க எந்த பொருளும் வாங்க முடியாது... நீதி: கணவரோட பொழுது போக்குக்கு எப்பவுமே தடை போடக்கூடாது!!