எல்லாமே பொய்யாப் போச்சே!

17 கார்த்திகை 2012 சனி 04:52 | பார்வைகள் : 14156
ஒருவன் தன்னுடைய வீட்டில் பொய் சொன்னால் கண்டுபிடித்துவிடும் லை டிடெக்டரை வாங்கிக் கொண்டு வந்தான்.
"இது எதற்கு?" என்று அவன் மனைவி கேட்டாள்.
"இது யார் பொய் சொன்னாலும் கண்டுபிடித்துவிடும் நம்முடைய வீட்டுக்கு அவசியம் தேவை" என்று அவன் கூறினான்.
அந்த நேரம் பார்த்து அவனுடைய மகன் வீட்டிற்கு லேட்டாக வந்தான்.
" எங்கே போய் சுத்திட்டு வர்றே? என்று கேட்டார் அப்பா
அதற்கு மகன், " ப்ரெண்ட் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்" என்று கூறினான்
உடனே அந்த மிசின் பொய்... பொய்... என்று கத்தியது.
உடனே அப்பா சந்தோசமாக, பார்த்தியா இந்த மிசின் கண்டுபிடிச்சிருச்சு. உன்னோட வயசுல நான் பொய்யே சொன்னதில்லை என்று அப்பா பெருமிதமாக கூறினார்.
உடனே அந்த மிசின் மறுபடியும் பொய்... பொய்... என்று கத்தியது.
அப்பாவிற்கு அவமானமாகப் போய்விட்டது. இதனைப் பார்த்த அவனுடைய மனைவி, "உங்களை மாதிரித்தானே உங்க மகனும் இருப்பான்" என்று கூறினாள்.
உடனே லை டிடெக்டர் சத்தமாக பொய்... பொய்... என்று கூவ ஆரம்பித்துவிட்டது.
இதைக் கேட்டதும் கணவனும், மனைவியும் திரு திருவென விழிக்க ஆரம்பித்தனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025