Paristamil Navigation Paristamil advert login

டாக்டர் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் !!

டாக்டர் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் !!

29 வைகாசி 2014 வியாழன் 16:05 | பார்வைகள் : 10140


வாத்தியார்: ஏன்டா 15 நாளா பள்ளிக்கு வரலே?
மாணவன்: எங்க அப்பா ஒரே இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு சொல்லிருக்காரு சார்.
--------------------------------------------
டாக்டர் என்னால வாய திறக்க முடியல..
"சரி சரி உங்க மனைவிய வெளியில நிக்க சொல்லறேன்
--------------------------------------------
எதுக்கு டாக்டர் மூச்ச இழுத்து விட சொல்றீங்க?
"இல்ல ஆபரேஷனுக்கு பிறகு மூச்சு விட முடியாது.."
--------------------------------------------
அந்த நோயாளிக்கு சொந்தகாரங்க யாரும் இல்லையா?
"ஆமா டாக்டர் எல்லோருக்கும் நீங்க தான் ஆப்ரேஷன் பண்ணீங்க
--------------------------------------------
உங்களுக்கு தலைவலி இருக்கா?
"தலைவலி வெளியில நிக்குது டாக்டர்
--------------------------------------------
டாக்டர் என் புருஷன் ராத்திரி தூக்கத்துல பேசுறாரு"
"நீங்க அவர பகல்ல பேச விடுங்க சரியாயிடும்
--------------------------------------------
நோயாளி: டாக்டர் எனக்கு இரண்டு நாளா ஜலதோசமா இருக்கு.
டாக்டர்: சரி இரண்டு நாளைக்கு வீட்ல மூணு வேள நல்ல குளிர்ந்த தண்ணில குளிச்சிட்டு வாங்க. 
நோயாளி: என்ன சொல்றீங்க ? அப்புறம் எனக்கு குளிர் காய்ச்சல் வந்துருமே!
டாக்டர்: பரவாஇல்ல.. எனக்கு ஜலதோசத்த விட குளிர் காய்ச்சல் எப்படி போக்கனுன்னும் தெரியும்.
--------------------------------------------
டாக்டர் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் !!" 
"பரவாஇல்ல என்னன்னு சொல்லுங்க" 
"டாக்டர் இது உங்க கிளினிக்னு தெரியாம வந்துட்டேன்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்