அப்புறம் நான் அழுதுடுவேன்!!
25 வைகாசி 2014 ஞாயிறு 13:10 | பார்வைகள் : 9981
சொத்து விசயமாக பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில் ஆஜரான வக்கீல்கள் மற்றும் நீதிபதி அனைவருமே வழக்கு தொடுத்த பெண்மணிக்கு சிறு வயது முதலே அறிமுகமானவர்கள்.
இந்நிலையில் வழக்கு விசாரணை எப்படி நடக்கிறது எனப் பாருங்களேன்....
உன்னைப் பத்தி தெரியாதா...
வக்கீல் 1: நான் யாரென்று உங்களுக்கு தெரிகிறதா?
பெண்: தெரியாமல் என்ன... சிறுவயதில் பக்கத்து வீட்டு பானையில் வெல்லம் திருடி அடி வாங்கியது முதல் பருவ வயதில் பக்கத்து வீட்டு அத்தைக்கு காதல் கடிதம் கொடுத்தது, இன்றளவும் உன் மனைவியிடம் நீ அடிவாங்குவது என எல்லா விசயங்களும் எனக்கு அத்துப்படி தான்...
இவரு எப்பூடி...?
பெண்ணின் வாக்குமூலத்தால் சற்று கலங்கிப் போன வக்கீல், எதிர்தரப்பு வக்கீலின் இமேஜை டேமேஜ் செய்ய முடிவு செய்தார்.
வக்கீல் 1: என்னைப் பற்றி பேசியது இருக்கட்டும். எதிர்தரப்பில் வாதாடுகிறாரே அவரைத் தெரியுமா..?
ரொம்ப மோசம் பாஸ்...
பெண்: அவரைப் பற்றி தெரியாதா... அவர் தன் பள்ளி ஆசிரியர்களிடமே பணத்தை திருடியவர். கண்ணில் கண்ட பெண்களுக்கெல்லாம் காதல் கடிதம் நீட்டியவர். நேற்று கூட மார்க்கெட்டில் ஒரு பெண்ணிடம் சில்மிசம் செய்ததற்காக ஒரு கூட்டம் அவருக்கு தர்ம அடி தருவதை என் கண்களால் கண்டேன்...
ஸ்டாப் இட்...
இம்முறை வக்கீல் வாயைத் திறப்பதற்கு முன்னதாக நீதிபதி முந்திக் கொண்டார்.
நீதிபதி: அடுத்து என்னைத் தெரியுமா என கூண்டில் நிற்கும் இப்பெண்ணிடம் யாராவது கேட்க முயற்சித்தீர்கள் என்றால், அவர்கள் மீது நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து விடுவேன். ஜாக்கிரதை....!