என் பிரண்டப் போல யாரு மச்சான்...?

29 ஐப்பசி 2013 செவ்வாய் 10:18 | பார்வைகள் : 12736
இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ராமு: நான் தான் புத்திசாலி... என்னால் செய்ய முடிந்தவற்றை சொல்கிறேன், அதை உன்னாலும் செய்ய முடிந்தால் நீயும் புத்திசாலி என ஒத்துக் கொள்கிறேன்...
கோமு: சரி... சொல்
ராமு: என்னால் காபி கோப்பைக்குள் காபியை நிரப்ப முடியும். உன்னால் உலக கோப்பைக்குள் உலகத்தை நிரப்ப முடியுமா...?
கோமு : ...????
ராமு : நான் உன் முகவரிக்கு எனது முகவரியை அனுப்புகிறேன்... நீ என் முகவரிக்கு உன் மொபைல் போனை அனுப்ப இயலுமா...?
கோமு : ...????
ராமு: கடைசிக் கேள்வி, நான் க்ரீம் பிஸ்கட்டை கிரீமோடு சாப்பிடுவேன், உன்னால் டைகர் பிஸ்கட்டை டைகரோடு சாப்பிட முடியுமா...?
கோமு :....???
ராமு: நான் தான் புத்திசாலி என இப்போதாவது புரிந்ததா உனக்கு....
கோமு: என்ன ஒரு புத்திசாலித் தனம்... நீயெல்லாம் நல்லா வருவடா...நண்பேண்டா
கோமு : ...???? கோமு: ...????