Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானின் மிருகக்காட்சி சாலையில் இலங்கை யானைகள் துன்புறுவது தொடருமா?

பாகிஸ்தானின் மிருகக்காட்சி சாலையில் இலங்கை யானைகள் துன்புறுவது தொடருமா?

26 சித்திரை 2023 புதன் 11:23 | பார்வைகள் : 8421

பாகிஸ்தானின் மிருகக்காட்சிசாலையில் யானையொன்று உயிரிழந்த சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இலங்கை பாகிஸ்தானிற்கு இரண்டு பெண்யானைகளை வழங்க முன்வந்துள்ளமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
இரண்டு யானைகளை வழங்குமாறு கோரி பாகிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை இரண்டு யானைகளை அனுப்பும் கராச்சிக்கும் லாகூரிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
அருகிவரும் விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் ஆசிய யானைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால்  பாகிஸ்தான்  அந்த  யானைகளை எவ்வாறான நிலையில் வைத்திருக்கப்போகின்றது என்பது குறித்த  விபரங்களை வழங்கவேண்டும் என சூழல் விவகாரம் தொடர்பான சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
யானைகள் மிருகக்காட்சிசாலையில் வைத்திருக்கப்படும் விதம் காரணமாக அவற்றின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்பதையும் உறுதிப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும் இரண்டு நாடுகளிற்கும் இடையில் யானைகளை பரிமாறிக்கொள்ளும் வழக்கம் உள்ளது இது குறித்த முடிவுகளை ஜனாதிபதியே எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இராஜதந்திர பரிசுகளாக பெறப்பட்ட யானைகளை மோசமாக கையாளும் வரலாற்றை கொண்டது பாக்கிஸ்தான்.
 
1985இல் இலங்கை பாகிஸ்தானிற்கு அனுப்பிய யானை விவகாரம்   இதற்கு சிறந்த உதாரணம்.35 வருடங்களாக அந்த யானை போதிய வசதிகள் அற்ற இஸ்லாமபாத்  மிருகக்காட்சிசாலையில்  வாடியது.
 
அதனுடன் காணப்பட்ட சஹெலி என்ற யானை இறந்த பின்னர் காவன்  என்ற இலங்கை யானை உலகத்தின் மிகவும் தனிமையான யானை என வர்ணிக்கப்பட்டது.
 
பின்னர் சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்புகளும் கலைஞர்கள் சிலரும் மேற்கொண்ட முயற்சி காரணமாக நீண்ட சட்டசெயற்பாடுகளிற்கு பின்னர் அந்த யானை கம்போடியாவின் காடுகளிற்குள் அனுப்பப்பட்டது.
 
லாகூரில் உள்ள இலங்கை துணை தூதரக அதிகாரி வெளியிட்ட தகவல் குறித்து ரார் அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.
 
பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் யானைகளை பராமரிப்பதற்கான வளம் மற்றும் திறமைகள் தன்னிடம் இல்லை என்பதை பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது என ரார் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
1991ம் ஆண்டு இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட சஹெலி மெனிகா என்ற யானை 23 வயதில் பரிதாபமாக உயிரிழந்தது என குறிப்பிட்டுள்ள இலங்கை அமைப்பு 1985 ம் ஆண்டு இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட கரவன் என்ற யானை பொருத்தமற்ற வாழ்க்கை நிலைமைகள் மோசமான பராமரிப்பு போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் கம்போடியாவிற்கு அனுப்பப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
 
எனவே இதுபோன்ற நிலைமையை அனுபவிக்கும் மேலும் இலங்கை யானைகளை பாகிஸ்தானிற்கு அனுப்புவது குறித்து இலங்கை தூதரக அதிகாரி பரிசீலிப்பார் என்பது நினைத்துப்பாக்கமுடியாத விடயம் எனவும் தெரிவித்துள்ள இலங்கை அமைப்பு யானைகள் உணர்வுள்ள உயிரினங்கள் அவற்றை பொருளாக கருதி பரிசு கொடுக்க முடியாது இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இலங்கை அதிகாரிகளை இதனை மீள்பரிசீலனை செய்யுமாறும்  உயிரிழப்பதற்காக யானைகளை அனுப்பவேண்டாம் எனவும் நாங்கள் கேட்டுக்கொள்ளவுள்ளோம் எனவும் இலங்கையை சேர்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மிருகக்காட்சிசாலையில் யானையொன்று உயிரிழந்த சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இலங்கை பாகிஸ்தானிற்கு இரண்டு பெண்யானைகளை வழங்க முன்வந்துள்ளமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
இரண்டு யானைகளை வழங்குமாறு கோரி பாகிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை இரண்டு யானைகளை அனுப்பும் கராச்சிக்கும் லாகூரிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
அருகிவரும் விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் ஆசிய யானைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால்  பாகிஸ்தான்  அந்த  யானைகளை எவ்வாறான நிலையில் வைத்திருக்கப்போகின்றது என்பது குறித்த  விபரங்களை வழங்கவேண்டும் என சூழல் விவகாரம் தொடர்பான சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தானில்  நூர்ஜகான் என்ற 17 வயது யானை  நோயினால் உயிரிழந்த சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
இந்த யானையின் மரணத்தை தொடர்ந்து குறிப்பிட்ட  மிருகக்காட்சிசாலையை மூடுமாறு விலங்குகள் நலன்புரி அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
 
கடும் நோயினால் பாதிக்கப்பட்ட யானை கடந்த வாரம் ஒரு குளத்தில்  விழுந்தது என போர் பவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
 
யானையின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது அது நிற்ககூடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது நீண்டநாட்கள் நிலத்திலேயே படுத்திருந்தது இது விலங்குகளை பொறுத்தவரை உயிராபத்தை ஏற்படுத்தும் நிலை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
அங்கிருந்தவர்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்த போதிலும் அந்த யானையை எழுந்து நிற்க செய்ய முடியவில்லை இறுதியில் அந்த யானை உயிரிழந்தது என  அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
மிருகக்காட்சிசாலை போன்ற இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் யானைகள் 40 வயதிற்குள் உயிரிழக்கின்றன என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 
குறிப்பிட்ட மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்