Paristamil Navigation Paristamil advert login

சீன 'உளவு பலூன்'

சீன 'உளவு பலூன்'

2 பங்குனி 2023 வியாழன் 10:26 | பார்வைகள் : 4488


Billings Gazette இன் முன்னாள் ஆசிரியரான சேஸ் டோக் மற்றும் புகைப்படக் கலைஞரான லாரி மேயர் ஆகியோர் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி  மொன்டானாவில் உள்ள Billings நகரம் மீது ஒரு பெரிய பறக்கும் பொருளை படம்பிடித்தனர்.

டோக் ஆரம்பத்தில் இது ஓர் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள் (UFO) என்று நினைத்தார். புகைப்படங்கள் Gazetteஇல் வெளியிடப்பட்டன. விரைவில் பிரதான செய்தி நிறுவனங்களால் செய்தியாக வெளியிடப்பட்டன.

பெப்ரவரி 2ஆம் திகதி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கனேடிய தேசிய பாதுகாப்பு திணைக்களம் ஆகியவை வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளைத்தளம் (NORAD) அமெரிக்க வான்வெளியில் அதி உயரத்திலான ஒரு சீன கண்காணிப்பு பலூனை சில நாட்களாக கண்டிருப்பதாக அறிவித்தன. இந்த பலூன் பல முக்கிய இராணுவ தளங்களை கடந்து சென்றதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

சீன மக்கள் குடியரசு (PRC) பலூன் தங்களுடையது என்று ஏற்றுக்கொண்டது. சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளரான மாவோ நிங் கூறுகையில், 

"பலூன் ஆராய்ச்சிக்காக, பிரதானமாக வானிலை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு சிவிலியன் வானூர்தி" என்று குறிப்பிட்டதுடன், மேலும், மேற்கத்திய காற்றலைகளால் பாதிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சுய-திறன் கொண்ட வானூர்தி திட்டமிட்ட இலக்கிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றதாகவும் கூறினார். 

அத்துடன் சீனா தற்செயலாக நடந்த இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

சீனாவின் விளக்கத்தை அமெரிக்கா முதலில் ஏற்க மறுத்தது. ஊடகங்கள் காட்டுத்தனமான ஊகங்களை செய்துகொண்டிருந்ததுடன் குடியரசு கட்சியினர் சீனாவின் மீது பைடன் மிகவும் மென்மையாக இருப்பதாக வலியுறுத்தினர். 

பைடன் நிர்வாகம் தேசிய பாதுகாப்புக்கென அர்ப்பணிப்பை கொண்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது.

எனவே, பலூன் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அது மட்டுப்படுத்தப்பட்ட வழிசெலுத்தல் திறனை மட்டுமே கொண்டது என்றும் குறிப்பிட்ட சீனாவின் கூற்றை பென்டகன் நிராகரித்தது. 

இருப்பினும், சில வானிலை வல்லுநர்கள், பலூன் தவறிச் சென்றது எனும் சீனாவின் கூற்று சாத்தியமற்றது அல்ல என்று கூறினார்.

அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வளிமண்டல இரசாயனவியல் பேராசிரியரான டான் ஜாஃப், "மேற்கு அமெரிக்காவுக்கு பலூனை எடுத்துச் செல்லும் Westerlies எனப்படும் காற்றின் வடிவங்கள் சாத்தியமற்றதை போன்றதாயினும், முற்றிலும் சாத்தியமானது" என்று கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் சீனாவுக்கான திட்டமிடப்பட்ட இராஜதந்திர பயணத்தை ஒத்திவைத்தார். அவர் சீனாவுக்கு சென்றிருந்தால், 2018க்குப் பிறகு இதுபோன்ற முதல் வருகையாக அது இருந்திருக்கும்.

பெப்ரவரி 4ஆம் திகதி தென் கரோலினாவில் உள்ள சர்ப்சைட் கடற்கரையில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன், இது அமெரிக்க நிலபுலத்தினுள் F-22இனாலும் விமானத்தாலும் பதிவுசெய்யப்பட்ட முதலாவது நிகழ்வாகும். 

'அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுப்போம்' என்று சீனர்களுக்கு உறுதியளிப்பது இப்போது PRCஇன் பணியாகும். இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாவோ, "இந்த சம்பவத்தை அமெரிக்கா வேண்டுமென்றே பெரிதாக்கியதுடன், தாக்குதலுக்கு பலத்தை பயன்படுத்தியது" என்றும், "துப்பாக்கிச் சூடு ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் பொறுப்பற்ற செயல்" என்றும் கூறினார்.

அனைத்து முக்கிய ஏகாதிபத்தியங்களும் ஒருவரையொருவர் உளவு பார்க்கின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஜேர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்க்கல் உட்பட அண்டை நாடுகளின் மூத்த அதிகாரிகளை அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகம் (NSA) உளவு பார்த்தமை சில ஆண்டுகளுக்கு முன்பு தெரியவந்தது. 

சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்படுவதை இந்தியா எதிர்த்ததற்கான காரணங்களில் ஒன்று. அந்தக் கப்பலுக்கு இந்திய தகவல் தொடர்புகளை உள்வாங்கும் திறன் உள்ளது என்ற அச்சமாகும்.

சமீபத்தில் குறைந்தபட்சம் நான்கு சந்தர்ப்பங்களில் சீன பலூன்கள் அமெரிக்கப் பிரதேசத்தில் இயங்கியதாக அமெரிக்கா வலியுறுத்தி கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளரான வாங் வென்பின், "கடந்த ஆண்டில் பைடன் நிர்வாகம் அதிக உயரத்தில் 10க்கும் மேற்பட்ட பலூன்களை அதன் வான்வெளியில் பறக்கவிட்டது" என்று கூறினார்.

பெரும்பாலான மக்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால், இந்த தொழில்நுட்ப அதிகார மையங்கள் ஏன் அதிக உயரத்தில் பறக்கும் பலூனை மற்றையவரின் ஆட்புல எல்லைக்குள் பறக்கவிடுகின்றன என்பதுதான்.

செயற்கைக்கோள்களின் பெரிய வலையமைப்புக்கான அணுகலை கொண்டிருந்தபோதிலும், சீனா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை மிதக்கும் வானூர்திகளை உருவாக்குவதற்காக கணிசமான வளங்களை குவித்து வருகின்றன.

2022ஆம் ஆண்டில், அரச விண்வெளி குழுவான சீன வானியல் கைத்தொழிற்துறை கூட்டுத்தாபனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று சூடான வாயு பலூன்களை சீனா சான்றளித்தது.

அந்த ஆண்டு மே மாதம், சின்ஹுவா, 'வளிமண்டல கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட சீனாவால் சுயமாக தயாரிக்கப்பட்ட மிதக்கும் வானூர்தி, திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் 9,032 மீற்றர் உயரத்தை எட்டியது" என்று அறிவித்தது.

தற்செயலாக, அதே மாதத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க அரசாங்கம் சுமார் 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை பலூன் திட்டங்களுக்காக செலவிட்டதாகவும், 2023 நிதியாண்டில் பலூன் தொழில்நுட்பத்துக்காக 27 மில்லியனுக்கும் அதிகமாக செலவழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பொலிட்டிகோ அறிக்கையிட்டது. 

எனவே, இது தொடர்பான அறிக்கைகளின்படி, பலூன்கள் தரவுகளை சேகரித்து விமானங்களுக்கு தகவல் அனுப்புவதுடன், இறுதியில் சீனா மற்றும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஒலியை விட வேகமான (hypersonic) ஆயுதங்களை ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்படலாம்.

மத்திய உளவுத்துறையின் முன்னாள் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியும், அட்லாண்டிக் சபையின் வதிவிடமற்ற சிரேஷ்ட உறுப்பினருமான ஜோன் கே.கல்வர், புலனாய்வு மற்றும் கண்காணிப்பு செயற்கைக்கோள்களின் வலையமைப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்ப பலூன்கள் உதவும் என்று கூறுகிறார். 

வளிமண்டல நிலைமைகள் மற்றும் செயற்கைக்கோள்களால் கைப்பற்ற முடியாத தகவல் தொடர்பாடல்கள் பற்றிய தரவுகளை பலூன்களால் சேகரிக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடக செயலர் பிரிகேடியர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் கூறியது போல், சீனாவை பொறுத்தவரையில், மொன்டானா மீது பறக்கும் பலூனானது 'உளவுத்துறை சேகரிப்பு கண்ணோட்டத்தில் வரையறுக்கப்பட்ட சேர்மான மதிப்பைக் கொண்டுள்ளது' எனலாம்.

வரையறுக்கப்பட்ட சேர்மான மதிப்புக்காக எல்லாவற்றையும் ஏன் பணயம் வைக்க வேண்டும்?

சில மாதங்களாகவே அமெரிக்காவுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை குறைக்க சீனா ஒரு வசீகரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கனுடனான சந்திப்பின்போது, தைவான் முதல் உக்ரைன் போர் வரையிலான பல விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவிருந்தது. 

பிளிங்கன் வெளியுறவு அமைச்சரான குயின் கேங்கை சந்திக்கவிருந்ததுடன், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கையும் சந்திப்பார் என்று நம்பப்பட்டது.

பிளிங்கனின் வருகை இரத்து செய்யப்பட்ட நிலையில், எவரும் பெய்ஜிங்குக்குச் செல்வதற்கு முன், பல உயர்மட்ட அமெரிக்க அரசியல்வாதிகள் தைவானுக்குச் செல்வார்கள். 

மொத்தத்தில், இரு தரப்பினரும் ஸ்திரப்படுத்த விரும்புகின்ற சீன - அமெரிக்க உறவுகளுக்கு இவை நல்ல முன்னேற்றங்கள் அல்ல.

பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்துகொண்டு, பிளிங்கன் சீனாவுக்கு புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மொன்டானாவில் நுழைவதற்கு சீனா ஓர் 'உளவு பலூனை' அனுப்புவதற்கு தர்க்க ரீதியான காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இது பிரதானமாக வானிலை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் 'சிவிலியன் வானூர்தி' என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டில், தைவான் அதிகாரிகள் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வானிலை பலூன்கள் தங்கள் நாட்டின் மீது பறப்பதைக் கண்டறிந்தனர். 

இந்த பலூன்கள் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக யூகங்கள் இருந்தாலும், இந்த பலூன்கள் உண்மையில் வானிலை பலூன்கள் என்பதை தைபே ஏற்றுக்கொண்டது.

பெப்ரவரி 14ஆம் திகதி தி வொஷிங்டன் போஸ்ட், "அமெரிக்காவின் மையப்பகுதியை சீனா தனது வான்வழி கண்காணிப்பு சாதனம் மூலம் ஊடுருவ விரும்பவில்லை என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வாளர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர்" என்றும், எதிர்பாராத வானிலை காரணமாக பலூன் உண்மையில் விலகிச் சென்றிருக்கலாம் என்றும் கூறியது.

சீனாவின் தெற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள ஹைனான் தீவில் உள்ள அதன் சொந்த தளத்திலிருந்து பலூன் விடுவிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் அதை கண்காணித்து வருவதாகவும், குவாம் மீது பயணிக்க வழிப்படுத்தப்பட்ட அது, ஆரம்பத்தில்'எதிர்பாராத வடக்கு நோக்கிய திருப்பத்தை' ஏற்படுத்தியதாகவும் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் தி போஸ்ட்டிடம், பலூன் கனடாவில் பலத்த காற்றை எதிர்கொண்டதாகவும், 'பலூனை தெற்கே அமெரிக்காவின் கண்டத்துக்கு' தள்ளியது என்றும் கூறினர். 

இந்த விடயம் வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்குக்கும் இடையே பதட்டங்களை தூண்டியிருக்கும் சர்வதேச நெருக்கடி, குறைந்தபட்சம் ஒரு தவறின் விளைவாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் கீழே விழுந்த மூன்று அடையாளம் தெரியாத பொருள்கள் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன என்றும், அவை உளவு பார்க்க பயன்படுத்தப்படவில்லை என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கையிட்டது.

ஒருவேளை சீனர்கள் எல்லாவற்றிலும் உண்மையை சொல்லிக்கொண்டிருக்கலாம்.

கடந்த இரண்டு வாரங்களாக அறிக்கையிடப்பட்டதை பார்க்கும்போது, சீனாவும் அமெரிக்காவும் இரு நாடுகளினதும் வானிலை பலூன்கள், கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்பட்டு அல்லது பயன்படுத்தப்படாமல் பரஸ்பரம் தங்கள் பிராந்தியங்களில் பயணிப்பதை அறிந்திருந்தமை தெளிவாகிறது. 

இந்த பலூன்களின் ஓரளவான தாக்கத்தை கருத்தில் கொண்டு, இரு நாடுகளிலும் உள்ள பாதுகாப்பு மற்றும் அரசியல் நிறுவனங்கள் சம்பவங்களை மூடி மறைக்க விரும்புகின்றன.

இருப்பினும், சமீபத்திய பலூன் பொதுமக்களால் கண்டறியப்பட்டது. அமெரிக்க ஊடகங்கள் மற்றும் குடியரசுக் கட்சியால் தூண்டப்பட்ட பின்னர் பைடனின் நிர்வாகம், தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளவில்லை என்று மக்களுக்கு உறுதியளிக்க வேண்டியிருந்தது. அதே அழுத்தங்களை PRC அரசாங்கமும் அனுபவித்தது.

ஊடக மாயை மெதுவாக தணிந்து, குடியரசுக் கட்சியினர் விமர்சிப்பதற்கு மற்ற டிராகன்களை கண்டறிந்த பிறகு, வொஷிங்டனும் பெய்ஜிங்கும் 'உளவு பலூன்' சம்பவத்தை கடந்து செல்ல முயற்சிக்கும். 

பிளிங்கன் பெரும்பாலும் இந்த வாரம் ஜெர்மனியில் சீனாவின் உயர்மட்ட தூதர் வாங் யியை சந்திப்பார்.

அதே நேரத்தில், அமெரிக்கா பலூனை சுட்டு வீழ்த்தியதால், PRC தனது நிலையை காப்பாற்ற வேண்டும். PRCக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளதா என்பதே பிளிங்கன் வாங் யியைச் சந்திப்பாரா என்பதையும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் மோசமடையுமா என்பதையும் தீர்மானிக்கும்.

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்