Paristamil Navigation Paristamil advert login

இலங்கையை மீட்பதில் ஜனாதிபதியிடம் தெளிவான திட்டம்

இலங்கையை மீட்பதில் ஜனாதிபதியிடம் தெளிவான திட்டம்

8 ஐப்பசி 2022 சனி 15:18 | பார்வைகள் : 7272


ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, தனது அடுத்த விஜயமாக ஜப்பான்-, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டார்.

 
ஜனாதிபதியின் அவ்விஜயத்தை சிலர் விமர்சித்தார்கள். நாட்டில் மோசமான பொருளாதார பிரச்சினைகள் உள்ள பின்னணியில் மகாராணிக்கு இறுதியஞ்சலி செலுத்த அவர் சென்றார் என்று கேலியாக சிலர் கூறினார்கள். ஆனால் அந்தக் கூற்றுகள் தற்போது வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் மூலம் நகைப்புக்குக்குரிய முடிவுகளை பெற்று வருகின்றன. 
 
இலங்கையின் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு ஜப்பான் தரப்பில் இருந்து ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக அந்நாட்டு நிதி அமைச்சர் சுனிச்சி சுசுக்கி விடுத்துள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளன. 
 
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜப்பானிய நிதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.  
 
வெளிநாட்டு ஊடகங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
இலங்கைக்கு 2.9பில்லியன் டொலரை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எது எவ்வாறாயினும் நட்பு நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாகவே ஜப்பானின் ஆதரவைப் பெறுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் சீனா, இந்தியா உள்ளிட்ட ஏனைய கடன் வழங்கும் நாடுகளின் ஆதரவையும் பெற வேண்டுமென ஜப்பானிய நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
தற்போது தோன்றியுள்ள பொருளாதார பிரச்சினையிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க ஜனாதிபதிக்கு தெளிவான திட்டம் ஒன்றுள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர் படிப்படியாக மேற்கொண்டு வருகின்றார். பிரச்சினை என்னவென்றால் இது பற்றி சிலர் அறியாதிருப்பதாகும். இல்லாவிட்டால் உண்மையை மறைக்க அவர்கள் எடுக்கும் முயற்சியாகும்.  
 
இந்தப் பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெற வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கை என்பது தெளிவாகிறது. அந்த நோக்கத்திற்காக ஜனாதிபதி தற்போது வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வருகின்றார். மேலும் இன்று உலக வழமையாகக் காணப்படுவது ஒரு நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயங்கள் அல்ல, அதற்குப் பதிலாக அரச தலைவர்கள், உயர்மட்ட இராஜதந்திர நிகழ்வுகள் மற்றும் உச்சிமாநாடுகள் மூலம் இராஜதந்திர உறவுகளை பேணுவதாகும்.
 
இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதனையே பின்பற்றி வருகின்றார். அவநம்பிக்கைக்குப் பதிலாக நம்பிக்கையை ஏற்படுத்தி இலங்கையின் சம்பிரதாய இராஜதந்திர உறவுகளுக்கு அப்பால் நட்பினை உதவியாகக் கொண்டு அவர்கள் அனைவரினதும் சக்தி மற்றும் பங்களிப்பை இந்நாட்டுக்கு முதலீடாக்கியுள்ளது தற்போது உறுதியாகி உள்ளது. 
 
அதன்படி ஜனாதிபதி உலக மரண வீடுகளுக்கு விஜயம் செய்கிறார் என்று யார் கூற முயற்சி செய்தாலும் ஜனாதிபதியின் நோக்கம் என்ன என்பதை சிந்திக்கும் அனைவருக்கும் அதனைப் புரிந்து கொள்ள முடியும். 
 
இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் நாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றார். நாட்டை துர்ப்பாக்கியமான நிலையில் இருந்து மீட்டு எதிர்கால பரம்பரைக்கு வளர்ச்சி அடைந்த நாடொன்றை உருவாக்கிக் கொடுப்பதே அவரது நோக்கமாகும்.  
 
அண்மையில் அவர் மேற்கொண்ட ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுக்கான விஜயங்களும் அவ்வாறான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.  
 
ஜனாதிபதி கடந்த 26ஆம் திகதி அதிகாலை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். 
 
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மாத்திரமல்ல ஜப்பானிய பிரதமர், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி இலங்கைக்கான ஒத்துழைப்பை வழங்கும்படி அவர்களிடம் கோருவதற்காகும்.  
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பான் வெளிநாட்டமைச்சர் யோஷிமாஸா ஹயாஸிக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று 27ஆம் திகதி முற்பகல் டோக்கியோ நகரில் நடைபெற்றதோடு இலங்கைக்கான கடன் மறுசீரமைப்புக்காக கடன் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல்களில் தமது அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க தயாராக இருப்பதாக ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் தெரிவித்தார்.  
 
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து கவனம் செலுத்தும் வகையில் இலங்கையில் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை ஆராய ஜப்பான் தயாராக இருப்பதாகவும் ஜப்பானிய வெளிநாட்ட மைச்சர் தெரிவித்தார்.  
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று அன்றைய தினம் இடம்பெற்றது.
 
சிங்கப்பூருடன் ஏற்படுத்திக் கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வதேச வர்த்தக காரியாலயமொன்றும் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் மீண்டும் இலங்கையுடன் முதலீட்டுக்கு தயாராகவுள்ளது என லீ சியோன் லூங் தெரிவித்தார்.
 
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷிங்ஸோ அபேயின் பூதவுடலுக்கு இறுதி கிரியைகள் 27ஆம் திகதி டோக்கியோ நகரில் நிப்போன் புடோகானில் பூரண அரச மரியாதையுடன் நடைபெற்றன. ஜப்பானின் பிரதமராக ஷிங்ஸோ அபே பிரதமராக இருந்த வேளையில் இலங்கையின் அபிவிருத்திக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஸிடாவுக்குமிடையே 28ஆம் திகதி இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
 
அதேவேளை டோக்கியோ நகரின் இம்பீரியல் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி, ஜப்பானிய பேரரசர் நருஹிட்டோவையும் சந்தித்து கலந்துரையாடினார்.
 
ஜப்பானிற்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஐயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசியா அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55ஆவது வருடாந்த கூட்டத்திற்கு தலைமை வகிப்பதற்காக பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவை கடந்த 28ஆம் திகதி சென்றடைந்தார்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் டி மார்கோஸ் ஜுனியருக்கும் இடையிலான சந்திப்பு 29ஆம் திகதி முற்பகல் மணிலா நகரில் நடைபெற்றதோடு, ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான நீண்ட கால நட்பை மேலும் பலப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
 
ADB தலைவருடனான சந்திப்பும் சர்வதேச பல்கலைக்கழகமும் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் சத்சுகு அஸகாவா இடையே சந்திப்பொன்று 30ஆம் திகதி இடம்பெற்றது. அங்கு ஆசிய அபிவிருத்திக் வங்கியின் தலைவர் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார்.
 
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவுவதற்கும் ஆலோசனை தெரிவித்தார். நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் மீண்டும் அதனை வளர்ச்சிப் பாதைக்கு இட்டு சென்று நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றிய ரணில் விக்கிரமரசிங்க ஜனாதிபதியாக மீண்டும் அதனை உறுதி செய்துள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்