Paristamil Navigation Paristamil advert login

விராட் கோலிக்கு கேப்டன் பதவி - எம்.எஸ்.கே பிரசாத் கேள்வி

விராட் கோலிக்கு கேப்டன் பதவி - எம்.எஸ்.கே பிரசாத் கேள்வி

11 ஆடி 2023 செவ்வாய் 04:41 | பார்வைகள் : 3295


ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி துடுப்பாட்டம் ஒழுங்காக அமையவில்லை.

இதனால், ரோஹித் சர்மாவை பலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அணியை நடத்திய விதமும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.

தற்போது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் பேசுகையில்,

தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைமை எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. முதலில் அவர்களுக்கு தெளிவான மனநிலை இருக்க வேண்டும்.

ரஹானே மீண்டும் துணை கேப்டனாகும்போது, கேப்டன் பதவிக்கு விராட் கோலியை மீண்டும் கொண்டு வரலாமே. முதலில் விராட் கோலியின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

தேர்வாளர்கள் ரோஹித் மீறி யோசனை செய்தால், அடுத்து விராட் கோலிதான் கேப்டன் பதவிக்கு தேர்வாவார் என்றார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்