Paristamil Navigation Paristamil advert login

கொரோனா வைரஸ் அபாயத்திலிருந்து விலகல்

கொரோனா வைரஸ் அபாயத்திலிருந்து விலகல்

6 பங்குனி 2021 சனி 08:01 | பார்வைகள் : 9601


தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தில் இருந்து உலகம் விடுபட முக்கியமாகக் கருதவேண்டிய அம்சங்களில் முதன்மையானது தடுப்பு மருந்தினை சமூகத்தில் ஏற்றுவது ஆகும். கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் பணி வெவ்வேறு சமூக மட்டங்களில் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
 
சமூக இடைவெளிகளைப் பேணல், முகக்கவசம் அணிதல் என்பவற்றை நாம் தவறாது கடைப்பிடித்தல் வேண்டும். சமூக இடைவெளியினைப் பேணுதல் என்பது வெறுமனே இரண்டு நபர்களுக்கிடையிலான தூரம் அல்ல. மாறாக சனத்திரள் நிறைந்த நிகழ்வுகளைத் தவிர்த்தல், போக்குவரவுக் கட்டுப்பாடு, குறித்த நிகழ்வுகளை விரைவாகச் செய்து முடித்தல் என்பனவும் அடங்கும்.
 
கைகளை அடிக்கடி சுத்தம் செய்தலும், கையினால் வாய், கண், மூக்கு பகுதிகளைத் தொடாது இருத்தலும் அவசியம். அத்துடன் அடுத்தவர்களுடனான தொடுகைகளையும், கண்டகண்ட இடங்களைத் தொடுவதையும் தவிர்த்தல் வேண்டும்.
 
கொரோனா வைரஸ் RNA திரிபடையும் வேகம் அந்நோய் தொற்றும் வேகத்திற்கு நேர்விகிதசமனாக அமையும். கொரோனா வைரஸ் திரிபடைதல் மருத்துவ இரசாயனங்களாலும், கதிர்வீச்சுக்களாலும் ஏற்படலாம். குறிப்பாகக் கொரோனாத் தொற்றுடைய நோயாளிகள் மருத்துவசிகிச்சைக்கு உட்படும்போது விகாரமடையும் கொரோனா வைரஸ் உருவாகலாம். எனவே நோயாளிகள் அனைவருக்கும் கொரோனாத் தடுப்பு ஊசி அளிக்கப்படுவதால் கொரோனாத் திரிபு ஏற்படும் வாய்ப்புக் குறைக்கப்படும்.
 
அதுமட்டுமல்லாது வளர்ப்புப் பிராணிகள், மிருகக்காட்சிச் சாலைகளில் உள்ள விலங்குகளிற்கு கொரோனத் தொற்று ஏற்படவும், அவ் விலங்குகளில் கொரோனா வைரஸ் கடத்தப்படவும் வாய்ப்புக்கள் உள்ளது. எனவே அடுத்த கட்டமாக விலங்கு மருத்துவத்துறையினரும் செல்லப் பிராணிகளிற்கான கொரோனாத் தடுப்பு மருந்தினைப் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
 
ஆய்வுகூடங்களில் கொரோனாத் தொற்றைக் கண்டறியும் PCR சோதனையை மட்டுப்படுத்தி Antigen சோதனையையே அதிகரிக்க வேண்டும். ஏனெனில் ஆய்வுகூடங்களை அதிகரித்து அதிக அளவில் PCR பரிசோதனையை மேற்கொள்ளும் போது முறையான மேற்பார்வை இல்லாதவிடத்து தவறுகளால் கொரோனா வைரஸ் பல வருடங்களுக்கு ஆய்வுகூடங்களில் சேமிக்கப்பட்டு வைக்கப்படலாம். இது மிகவும் ஆபத்தானது. அடுத்து பல்கலைக்கழகங்கள் சுயாதீனமான கொரோனா வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டால் அல்லது தற்செயலாக கொரோனா வைரஸ் சுNயு யில் திரிபினை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களை உபயோகித்தால் அது மீளவும் உலகிற்கு ஓர் உயிரியல் ஆயுதமாகவே அமையும்.
 
இன்று தீவிரவாதம் அதிகமாகவுள்ள ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள், உலகின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு கட்டுப்படுத்தப்படல் வேண்டும். மாறாக ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு நாடும் கொரோனா வைரஸினை செறிவாக்கும் ஆய்வுகூடங்களைப் பெருக்கின் அது உலக அமைதிக்குப் பங்கமாக அமையலாம்.
 
மேலும் தற்போது உலகில் பரவிய கொரோனாத் தொற்றின் ஏதுவாக காலநிலை மாற்றமும், சூழல் வெப்பமடைந்தமையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதாவது கொரோனா வைரஸ் மனித உடலில் தீவிரமாகப் பரவுவுதற்கு கொரோனா வைரஸ் பெருக்கத்திற்காக நொதியத்தின் செயற்பாடு சூழல் வெப்பநிலையின் அதிகரிப்பால் அதிகரித்தமையும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.
 
மானிட நேயத்தினையும், மிருக நேயத்தையும் கருதி நாம் கொரோனாத் தடுப்பு ஊசி செயற்திட்டத்தினை விரிவாக்க வேண்டும். தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கத்தக்கதாகவும், தடுப்பூசிகளை அனைவரும் சுலபமாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் திட்டங்கள் அமைக்கப்படல் வேண்டும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்