Paristamil Navigation Paristamil advert login

சீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்!

சீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்!

2 ஆடி 2020 வியாழன் 20:10 | பார்வைகள் : 9232


அமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பானும் களமிறங்கி யுள்ளது. சீனாவை எதிர்க்கும் வகையில் இந்தியா, - ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டு இருக்கின்றன. இன்னும் பல்வேறு இராணுவ ரீதியான திட்டங்களை இரண்டு நாடுகளும் செயல்படுத்த உள்ளன.

 
இந்தியா_ சீனா இடையே லடாக் எல்லையில் நிலவி வரும் மோதலில் இந்தியாவிற்கு ஆதரவாக பெரிய நாடுகள் களம் இறங்க உள்ளன. இந்திய எல்லையில் இருக்கும் நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராக இருக்கும் நிலையில் மற்றைய வல்லரசு நாடுகள் இந்தியாவிற்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.
 
"இந்தியாவிற்கு ஆதரவாக போர்ப் படைகளை அனுப்புவோம், சீனா எங்கெல்லாம் பிரச்சினை செய்கிறதோ அங்கெல்லாம் படைகளை அனுப்புவோம்" என்று அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்து இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பான் படைகளை அனுப்ப உள்ளது. முதற்கட்டமாக அதற்காக இந்தியா_ - ஜப்பான் இடையே கடற்படை ரீதியான கூட்டுப் பயிற்சி நடந்துள்ளது. இரண்டு நாட்டு கடற்படைகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் கூட்டாக பயிற்சி நடத்தி இருக்கின்றன. கடந்த மூன்று வாரமாக திட்டமிடப்பட்டு இந்தப் பயிற்சி நடந்தது. இரண்டு நாட்டின் நவீன போர்க் கப்பல்களும் இந்த கூட்டு பயிற்சியில் இடம்பிடித்தன.
 
இது சீனாவிற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. டோக்லாம் பிரச்சினையின் போதே ஜப்பான் இந்தியாவிற்குதான் ஆதரவு அளித்தது.
 
அதேபோல் கல்வான் சண்டையிலும் கூட இந்திய வீரர்களின் வீரமரணத்திற்கு ஜப்பான் இரங்கல் தெரிவித்து இருந்தது. அதோடு ஜப்பான்_-சீனாவிற்கு இடையே கிழக்கு சீன கடல் எல்லையில் எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.
 
அங்கு ஜப்பான் கடல் எல்லைக்குள் சீனாவின் கப்பல்கள் அத்துமீற தொடங்கி உள்ளன. 2013க்கு பிறகு சீனாவின் போர்க் கப்பல்களும் ஜப்பான் அருகே அத்துமீற தொடங்கி உள்ளன. இதனால் ஜப்பானும் சீனா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. அதேபோல் சேனகாகு தீவுகளில் ஜப்பான் -- சீனா இடையே கடுமையான முறுகல் நிலவி வருகிறது. இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
 
சீனாவிற்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றாக சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு Quad என்று பெயர். சீனாவிற்கு எதிராக குவாட் நாடுகள் ஒன்றாக சேர்வதற்கான ஆயத்தமாக இந்த போர்ப் பயிற்சி பார்க்கப்படுகிறது.
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்