Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது?

இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது?

7 பங்குனி 2020 சனி 12:38 | பார்வைகள் : 9072


சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய அமெரிக்கா, இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் நுழைய முடியாதளவிற்கு பயணத்தடையை விதித்திருந்தது. இந்தத் தடை அறிவிக்கப்பட்டிருக்கும் சம வேளையிலேயே ஜ.நா மனித உரிமைகள் பேரiயின் கூட்டத் தொடரும் ஆரம்பித்திருந்தது. மேலோட்டமாக பார்த்தால் அமெரிக்காவின் பயணத் தடைக்கும் ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் தொடர்புள்ளதான ஒரு தோற்றம் தெரியக் கூடும். இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் பேசுபவர்களும் இவ்வாறான தொணியில் பேசுவதையும் ஆங்காங்கே காண முடிகின்றது. ஆனால் அமெரிக்காவின் பயணத் தடை அறிவிப்பிற்கும், ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அணுமுறைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
 
இதனை விளங்கிக் கொள்வதற்கு முதலில் தற்போதுள்ள அமெரிக்காவின் நிர்வாகம் ஏன் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது என்பதற்கான பதிலை காண்போம். டொனால் ரம், தலைமையில், அமெரிக்காவின் குடியரசு கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து உடனடியாகவே அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது.
 
இதற்கும் அமெரிக்காவின் மனித உரிமைகள் மீதான அணுமுறைக்கும் ஒருவிதமான தொடர்புமில்லை. இது முற்றிலும் அமெரிக்காவின் குடியரசு கட்சியின் நிலைப்பாடு. குடியரசு கட்சி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் மனித உரிமைகள் பேரவையுடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்ளும். இதுதான் இதுவரையான வரலாறு. ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2006இல் ஆரம்பிக்கப்பட்ட போது, அப்போதைய குடியரசு கட்சியின் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஸ் அதில் பங்குபற்றுவதை நிராகரித்திருந்தார். 
 
இது மனித உரிமைகள் பேரவைக்கு பெரும் பின்டைவை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பில் புஸ் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மனித உரிமைகளை மீறுவோரும் மனித உரிமைகளை பாதுகாப்போரும் ஒரிடத்தில் பணியாற்ற முடியாது. எனினும் 2009இல் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமா வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகம் மனித உரிமைகள் பேரவையில் இணைந்து கொள்ளும் முடிவை எடுத்திருந்தது. இதனை குடியரசு கட்சியினர் கடுமையாக விமர்சி;திருந்தனர். ஒபாமா நிர்வாகம் மனித உரிமைகள் பேரவையில் இணைந்து கொண்டதன் பன்புலத்தில்தான் அமெரிக்கா இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக நம்பப்படும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகி;த்து. அந்த அழுத்தங்களின் தொடர்சிதான் இப்போதும் மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்படுகின்றது.
 
டொனால்ட் ரம் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறப் போவதான எச்சரிக்கையை ரம் நிர்வாகம் வெளியிட்டிருந்தது. இதன் தொடர்சியாக கடந்த ஆண்டு யூன் மாதம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறும் முடிவை அறிவித்தது. ஏன் குடியரசு கட்சி மனித உரிமைகள் பேரவையை வெறுக்கின்றது? அதன் பின்னாலுள்ள அரசியல் என்ன?
 
உண்மையில் தற்போதுள்ள மனித உரிமைகள் பேரவை 2006இல் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு (ருN ஊழஅஅளைளழைn ழn ர்ரஅயn சுiபாவள ) என்னும் பெயரில்தான் இந்த அமைப்பு இயங்கிவந்தது. இதன் ஆற்றல் போதாது என்னும் அடிப்படையில்தான் 2006இல் இது மறுசீரமைக்கப்பட்டது. ஆனால் இந்த மறுசீரமைப்பை அப்போதைய புஸ் தலைமையிலான குடியரசு அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. இதற்கு எதிராகவே அமெரிக்கா வாக்களித்தது. அப்போது ஜோன் வோல்டன் ஜக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவராக இருந்தார். இவர்தான் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்மின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்.
 
மனித உரிமைகள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அமெரிக்காவின் குடியரசு கட்சி, உரிமைகள் பேரவையை அரசியல் உள்நோக்கம் கொண்ட அமைப்பு என்றே விமர்சித்து வருகின்றது. கடந்த ஆண்டு பேரவையிலிருந்து வெளியேறும் முடிவை அறிவித்த போதும், இப்போது ஜ.நாவிற்கான அமெரிக்க தூதுவராக இருக்கும் நிக்கி ஹெலி அதனை மீளவும் வலியுறுத்தியிருந்தார். அவரது அறிக்கையில் பேரவை தொடர்பில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. மனித உரிமைகள் பேரவை அதன் பெயருக்கு ஏற்ப தகுதியுடைய ஒன்றாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் அவர், மனித உரிமைகள் பேரவையை அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படடு;வருவதாகவும் – இது தனக்கு தானே சேவை செய்துகொண்டிருக்கின்ற ஒரு அமைப்பு என்றும் கடுமையாக சாடியிருக்கின்றார்.
 
மனித உரிமை மிறல் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் சீனா, கியுபா, ரஸ்யா, வெனிசுவேலா, கொங்கோ குடியரசு அத்துடன் சவுதிஅரேபியா போன்ற நாடுகளும் மனித உரிமைகள் பேரiயில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றன. இவ்வாறான நாடுகள் மனித உரிமைகளை மீறுவோருக்கான காப்பரனாக தொழிற்பட்டுவருகின்றது. இவ்வாறான நாடுகளால் மனித உரிமைகள் பேரவை தவறாக வழிநடத்தப்படுகின்றது என்பதே, குடியரசு கட்சியின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. இதற்கு உதாரணமாக இஸ்ரேல் விவகாரத்தை குடிரயசு நிர்வாகம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றது. மனித உரிமைகளை மீறுவோர் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பானது, இஸ்ரேலுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் தொழிற்பட்டுவருகின்றது. மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேல் விவகாரம் மட்டுமே தொடர்ந்தும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இது விடயம் 7 (ஐவநஅ 7)என்று அழைக்கப்படுகின்றது. மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டு 12 வருடங்கள் ஆகின்றன. இந்த 12 வருடத்தில் மனித உரிமை மீறல்களின் ஈடுபடும் எந்தவொரு நாடும் பேரவையின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவில்லை ஏன்? – என்றும் தூதுவர் நிக்கி கேள்வி எழுப்பியிருக்கின்றார். தர்க்கத்தின் அடிப்படையில் நோக்கினால் அமெரிக்காவின் கேள்வி நியாயமானது. இவ்வாறான பின்புலத்தில்தான் டொனால் ரம் தலைமையிலான குடியரசு நிர்வாகம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியிருக்கின்றது. அதாவது யானை மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறிவிட்டது. அமெரிக்காவின் வெளியேற்றம் மனித உரிமைகள் பேரவையை பொறுத்தவரையில் ஒரு பெரும் பின்னடைவு. ஏனெனில் அமெரிக்காவின் ஆதரவின்றி பேரவையினால் ஆக்கபூர்வமாக செயற்பட முடியாது.
 
அமெரிக்காவின் வெளியேற்றம், அமெரிக்காவின் மனித உரிமைகள் மீதான உளகளாவிய ஈடுபாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? நிச்சயமாக இல்லை. அமெரிக்காவை பொறுத்தவரையில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் தன்னை ஒரேயொரு சக்தியாகவே நிலைநிறுத்தி வந்திருக்கின்றது. ரம்மின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் வோல்டனின் வார்த்தையில் கூறுவதனால் அமெரிக்கா தற்போது பூமியில் இருக்கின்ற ஒரரேயொரு சிறந்த அரசியல் யாப்பினால் வழிநடத்தப்படுகின்றது எனவே அமெரிக்காவினால் தனித்து அதன் விழுமிங்களை பாதுகாக்க முடியும். எனவே அமெரிக்கா அதிலிருந்து விலகப் போவதில்லை. இலங்கை விவகாரம் இதற்கு உரு சிறந்த உதாரணம். இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்;திர சில்வாவிற்கு பயணத் தடை விதித்திருப்தை இந்த பின்புலத்தில்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இலங்கை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறினாலும் அல்லது மனித உரிமைகள் பேரவைக்கு ஒத்துழைக்க மறுத்தாலும், அமெரிக்காவின் மனித உரிமைகள் சார்ந்த அழுத்தங்களிலிருந்து தப்ப முடியாது. ஒபா நிர்வாகம் மனித உரிமைகள் சார்ந்து அழுத்தங்களை பிரயோகித்த போது, மகிந்த ராஜபக்ச நிர்வாகம் அதிகம் சீனாவை நோக்கி சாய்ந்தது. அண்மையில் அமெரிக்காவிற்கு மேற்கொண்டிருந்த விஜமொன்றின் போது, அமெரிக்காவின் வெகுசன ராஜதந்திரம் மற்றும் பொது விவகாரங்களுக்கான கிழக்கு மற்றும் பசுபிக் பிராந்திய துணை ராஜாங்கச் செயலர் வோல்டர் டக்ளஸை சந்திக்க முடிந்தது. இதன் போது அமெரிக்கா தனது உலகளாவிய கடப்பாடுகளிலிருந்து பினவாங்காது என்று அவர் குறிப்பிட்டார். ஒபாமா நிர்வாகம் மனித உரிமைகள் சார்ந்து அழுத்தங்களை பிரயோகித்த போது, கொழும்பு அதிகம் சீனாவை நோக்கிச் சாய்ந்துகொண்டது. இதனை ஒரு சவாலாக நீங்கள் பார்க்கவில்லையா என்று கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என்பதே அவரது அழுத்தமான பதிலாக இருந்தது.
 
அண்மையில் இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் 2015 தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது. இது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றும்தான். ஆனால் இலங்கை, அதன் மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய கடப்பாட்டிலிருந்து விலக முடியாது. அது தொடர்ந்தும் இலங்கையின் காலை சுற்றும் ஒரு பாம்பாகவே இருக்கப் போகின்றது. மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்கள் இலங்கையை பொறுத்தவரையில் பெரியளவில் பாரதூரமான ஒன்றாக இருக்கப் போவதில்லை ஏனெனில் பேரவை தற்போது ஒப்பீட்டளவில் பலவீனமாகவே இருக்கி;ன்றது. அமெரிக்க முன்னர் இலங்கையின் மீது கொண்டு வந்தது போன்றதொரு பிரேரணையை தற்போதுள்ள நிலையில் பிறிதொரு நாட்டினால் – உதாரணமாக இங்கிலாந்தினால் கொண்டுவர முடியாது. அதற்கான வலுவான ஆதரவுத்தளம் இங்கிலாந்திற்கு இல்லை. மேற்குலகுடன் ஒத்துப் போகும் முடிவை எடுப்பதன் மூலம் இதிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் இல்லாமலில்லை. ஆனால் அதற்கு இலங்கை அதிகம் மேற்கு நோக்கி சாய வேண்டும். மேற்கு நோக்கி சாய்தல் என்பது, மேற்கு முதன்மைப்படுத்தும் உலகளாவிய விழுமியங்களுக்கு அதிகம் நெருக்கமாவதுதான். அதற்கு சீனா மற்றும் ரஸ்யா போன்ற மேற்கின் ஆட்சி ஒழுங்கை கேள்விக்குள்ளாக்க முற்படும் நாடுகளுடனான உறவுகள் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்களை நோக்கி அதிகம் சாய்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய உலக ஒழுங்கில் சீனா உலகு தழுவிய ஆட்சி ஒழுங்கிற்கு  ஒரு பெரும் சவாலாகவே பார்க்கப்படுகின்றது. சீனா மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் எந்த வகையிலும் பொறுப்புச் சொல்லாத – பொறுப்புச் சொல்ல விரும்பாத நாடு.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்