Paristamil Navigation Paristamil advert login

மனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்?

மனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்?

23 மாசி 2020 ஞாயிறு 14:16 | பார்வைகள் : 9423


கொரோனா வைரஸ்(COVID 19) என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது இயற்கையாக உருவானது என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வைடாங்க் தெரிவித்துள்ளார்.
 
கொரோனாவினால் சீனாவில் 2000இற்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 72ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிர் கொல்லியான இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.
 
வேலை மற்றும் கல்விக்காக சீனா சென்றவர்களில் பெரும்பாலானோரை அந்தந்த நாடுகள் மீட்டு விட்டன. அவர்களில் வைரஸ் பாதிப்புள்ளோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சீன ஜனாதிபதி  ஜீ ஜின்பிங்கிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கடிதம் எழுதினார்.
 
அந்தக் கடிதத்தில் கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என்றும், ஹுபே நகரில் தவித்த இந்தியர்களை மீட்க உதவியதற்காக சீன ஜனாதிபதிக்கு பாராட்டுகள் என்றும் மோடி கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த உயிர்கொல்லி நோயை எதிர்த்து சீன அரசு மாபெரும் முயற்சியை செய்துள்ளது என்றும் மோடி தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வைடாங்க் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் "கொரோனா வைரஸ் மீன் சந்தையிலிருந்து பரவியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறில்லாமல் வுகான் இன்ஸ்டியூட் ஒப் வைராலொஜியிலிருந்து கொரோனா வைரஸ் தவறுதலாக வெளியேற்றப்பட்டதற்கான வாய்ப்புகள் ஏதேனும் இருக்கிறதா"? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு சன் பதிலளிக்கையில் "கொரோனா வைரஸ் கொடூரமானது என்றால் அதை விட மிகவும் கொடூரமானவை வதந்திகள். கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது இயற்கையாக உருவாக்கப்பட்டது. கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு உதவிக் கரம் நீட்டியது மனதைத் தொட்டு விட்டது. கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய் பரவிய போது இந்தியா சார்பில் உதவுவதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ​ேஜார்ஜ் பெர்னாண்டஸ் ஷாங்காய் வந்திருந்தது நினைவு கூரத்தக்கது" என்றார் சீன தூதர்.
 
 
கொடுமையான கொரோனா வைரஸ் சீனாவை மொத்தமாக முடக்கி உள்ளது.இந்த வைரஸ்  ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்குப் பரவும்.
 
அதாவது இந்த வைரஸ் தாக்கிய நபர் எதைத் தொடுகிறாரோ, அதை தொடும் மக்களுக்கு உடனே வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.
 
கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 1886ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 72436பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த மோசமான வைரஸ் குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டோங் விபரிக்ைகயில் "சீனாவில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
 
அங்கு வைரஸ் தாக்கிய எல்லோருக்கும் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த மிக கடுமையான நேரத்தில் இந்தியா எங்களுடன்  இருக்கிறது. இந்திய நண்பர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
 
சீன மருத்துவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். இந்த வைரஸ் காரணமாக அங்கு மருத்துவர்கள் பலர் பலியாகி வருகிறார்கள் . சிகிச்சை அளிக்கும் போதே நோய் தாக்கி பலர் பலியாகி உள்ளனர். அவர்களின் செயல் மிகப் பெரியது. அவர்களின் தியாகம் அளப்பரியது. அவர்களை வார்த்தைகளால் பாராட்டவோ நன்றி தெரிவிக்கவோ முடியாது" என்றார். 
 
"சீனாவில் இந்த வைரஸ் வுஹன் வைராலொஜி சோதனை மையத்தில் இருந்து பரவி இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். அதேபோல் மீன் சந்தையில் இருந்து பரவி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையில் எப்படி பரவியது என்று இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இது இயற்கையாக உருவானது. நாங்கள் உருவாக்கவில்லை என்பது மட்டும் உண்மை. வைரஸை விட வதந்தி மிக மோசமானதாக இருக்கிறது" என்று இந்தியாவிற்கான சீனத் தூதர் சன் வெய்டோங் தெரித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்