Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியுறும்!

சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியுறும்!

16 மாசி 2020 ஞாயிறு 12:47 | பார்வைகள் : 9334


சீனாவின் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) தாக்கத்தால் சர்வதேச பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிச்சயம் இருக்கும். ஆனால் அதை தற்போது சொல்வது மிக கடினம். எனினும் நிச்சயம் அதன் தாக்கம் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ​ேஜார்ஜீவா கூறியுள்ளார்.
 
"சீனாவில் கொரோனா வைரஸால் தாக்கம் இருக்கும். அதை தற்போது சொல்வது மிகக் கடினம். ஆனால் சற்று வீழ்ச்சி இருக்கும்" என்று கிறிஸ்டலினா தெரிவித்துள்ளார்.
 
"இந்த கொடிய வைரஸால் இறப்பு எண்ணிக்கை 1,350யும் தாண்டியுள்ளது. மேலும் இந்த மாத கடைசியில் இறப்பு எண்ணிக்கையானது உச்சத்தைத் தொடலாம் என்ற நம்பிக்கைகள் வலுத்துள்ளன. இந்த கொடிய கொரோனாவினால் சீனாவின் செயல்பாட்டில் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கூர்மையான மீட்சி உள்ளது. அதாவது உலகின் மற்றப் பகுதிகளுக்கு இலேசான தாக்கம் மட்டுமே இருக்கும்" என்றும் ​ேஜார்ஜீவா கூறியுள்ளார்.
 
"உலகப் பொருளாதாரம் சற்றுக் குறைவான வலிமையுடன் உள்ளது. இதன் பாதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியாது. மேலும் சீனா வேறுபட்டது. உலகம் வேறுபட்டது" என்று அறிக்கைகள் கூறுகின்றன.
 
மேலும் சீனாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 6% ஆக வளரக் கூடும். ஆனால் சார்ஸ் வைரஸ் தாக்கத்தின் போது 2003இல் இது 10% ஆக இருந்தது என்று ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளும் எந்த ஒரு முன்னறிவிப்புகளையும் வழங்கத் தயங்குகிறார்கள்.
 
ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறுகிய காலமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் என்று ​ேஜார்ஜீவா கூறியுள்ளார்.
 
இந்த வைரஸானது சீனாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சீனாவின் திறைசேரி செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவை பொறுத்த வரையில் இந்த ஆண்டைத் தாண்டியும் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், "நாங்கள் மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம்" என்ற கருத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
 
எப்படி இருப்பினும் அமெரிக்க பொருளாதாரமோ, சீனாவோ அல்லது இந்தியாவோ நிச்சயம் கொரோனாவின் தாக்கத்தினை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதிலும் இந்தியா தற்போது இருக்கும் நிலையில் இருமடங்கு தயாராக இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்