ஆசியாவில் மீண்டெழும் போதைப்பொருள் சாம்ராஜ்ஜியமும் இலங்கையில் அதன் தாக்கமும்!
9 ஐப்பசி 2021 சனி 09:48 | பார்வைகள் : 9993
போதைப்பொருள் வர்த்தகம் அண்மைய நூற்றாண்டுகளின் காலம் முதல் உலகநாடுகளிடையே அரசியல் போர்களையும், தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தினையும் ஏற்படுத்தி இருந்தது. அமெரிக்கக்கண்டத்தில் மத்திய அமெரிக்க நாடுகளில் போதைப்பொருள் வர்த்தகம் எவ்வாறு வியாபித்து உள்ளதோ அவ்வாறே ஆசியாவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கூடாகச் சர்வதேச போதைக் கடத்தல் கும்பல்கள் செயற்படுகின்றன.
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியே கடத்தப்படும் போதைப் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கப்பல்கள் வழியாக பல்வேறு இடங்களுக்குப் பரிமாறப்படுகின்றது. தற்போது ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்களின் எழுச்சியானது மேற்குலகைப் போதைப் பொருட்களால் சமூகச் சீரழிவுக்கு உட்படுத்துவதற்கு ஏதுவாகும்.
இந்தியத் துறைமுகங்களில் போதைப்பொருள் கொள்கலன்களின் பரிமாற்றம் நடைபெற்றமையையும் அதில் இந்தியாவில் பிரபல கோடீஸ்வர முதலீட்டாளர் ஆன அத்வானி குழுமத்தின் பெயரிலான துறைமுகமும் சம்பந்தப்பட்டமை தெரிய வந்துள்ளது. இதே வேளையில் இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தினை அத்வானி குழுமம் ஏப்பம் இட்டு உள்ளது.
இலங்கையின் துறைமுக நகரை சீனா ஏப்பம் இட்டு உள்ளது. இவை இலங்கைச் சட்டத்திற்கு அப்பால் பாரிய கடற்கொள்கலன் கடத்தலுக்கு ஏதுநிலையினை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாகப் போதைப்பொருள் வர்த்தகத்தின் மையப்புள்ளியாகக் கொழும்பு மாறுவதற்கான ஏதுநிலை ஏற்பட்டு உள்ளது. இது உள்;ர் போதைப் பொருள் முகவர்களுக்கு சாதகமான சூழ்நிலையாகும். இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுபான்மைச் சமூகத்தினைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களாக அமைவர். அந்தவகையில் இலங்கைத் தமிழர்களும், தமிழக மக்களும் நவீன போதை வாணிப மையத்தின் தாக்கத்தினை நேரடியாக எதிர்கொள்வர்.
எனவே இது தொடர்பான விழிப்பினை தமிழ் மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.