Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்ேக முன்னுரிமை அளிக்க வேண்டும்!

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்ேக முன்னுரிமை அளிக்க வேண்டும்!

23 கார்த்திகை 2019 சனி 17:47 | பார்வைகள் : 9221


இந்து சமுத்திர பிராந்தியத்தில் அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்பட வேண்டும். நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் இல்லை. எனினும் எந்தவிதமான அச்சுறுத்தலையும் முறியடிக்க அரசு தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.
 
பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் சுமார் பத்தாண்டு காலத்துக்கு தேசிய பாதுகாப்புக்கு இலங்கையில் முன்னுரிமை தரப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு முதலில் அச்சுறுத்தல் ஏற்பட்டது 1962 இல் ஆகும்.
 
அப்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க பாதுகாப்புப் படையினரைக் கொண்ட ஒரு குழு முயற்சி செய்த போதே முதலாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டு தடவைகள் இளைஞர் கிளர்ச்சிகளுக்கு நாடு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. முதலாவது இளைஞர் கிளர்ச்சி தெற்கிலும் இரண்டாவது இளைஞர் கிளர்ச்சி வடக்கில் பிரிவினைவாத மோதலாகவும் வெடித்தன.
 
இது போன்ற பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நாட்டுக்கு ஏற்பட்ட போதிலும், தேசிய பாதுகாப்பு தந்திரோபாயங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இனங்காணவில்லை. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கு ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களே இவ்வாறான தேவையின் அவசியத்தை உணர்த்தியுள்ளன.
 
மேற்கூறிய அம்சங்களை கணக்கிலெடுத்து பாத்ஃபைண்டர் (Pathfinder) மன்றம் இது தொடர்பான ஆய்வை இவ்வருட ஆரம்பத்தில் தொடங்கி இப்போது அதனை நிறைவு செய்துள்ளது.
 
‘தேசிய பாதுகாப்பு செயல் திட்டம் 2020 இலங்கைக்கானது’ என்று தலைப்பிடப்பட்ட இந்த ஆய்வு அண்மையில் பூரணப்படுத்தப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
 
பனிப்போர் என்ற சந்தர்ப்பவாதத்தால் எழுந்த ஒரு நிலைப்பாடே தேசிய பாதுகாப்பு ஆகும். சம்பிரதாய ரீதியில் பார்க்கும் போது அது நாட்டை எதிரியிடம் இருந்து பாதுகாத்தல் என்று பொருள் பெறும். எவ்வாறெனினும் இன்றைய நிலையில் தேசிய பாதுகாப்பு என்பது பரந்துபட்ட அர்த்தத்தைத் தருகிறது. தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்திற் கொள்வதாகவும் அமைகிறது.
 
இதன்படி தேசிய பாதுகாப்பு என்பது பிரஜைகளின் உரிமைகள் மற்றும் அரசுக்கு அவர்கள் மேல் உள்ள பொறுப்பு ஆகியவற்றுடன் நெருங்கியதாக உள்ளது. ஆனால் இவை இரண்டையும் சமப்படுத்துவதிலேயே இன்று பிரச்சினை உள்ளது. தேசிய பாதுகாப்புக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை, கொள்கை மற்றும் திட்டமிடலில் இடம்பெறச் செய்வது எளிதானதல்ல.
 
சந்தை ஊக்குவிப்புடன் கூடிய பொருளாதார கொள்கைகள் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன் வறுமையையையும் குறைக்கின்ற அதேநேரம், வருமான இடைவெளியைக் கூட்டுகின்றன. இது மட்டுமன்றி, படித்த இளைஞர்களிடையே வேலை இல்லாமையையும் அதிகரித்துள்ளது. அத்துடன் நாட்டின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மை காரணமாக நிச்சயமற்ற நிலைமை உள்ளது.
 
இலங்கையின் நீண்ட கால பொருளாதார, அரசியல், கலாசார மற்றும் திட்டமிடல் தொடர்பாக இந்தியாவுடன் உள்ள தொடர்புகள் நாட்டின் உள் விவகாரங்களுக்கு மையமாக அமைகின்றன.
 
அதேவேளை இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்பது பிரிவினைவாத மோதலின் போது தெளிவாகத் தெரிந்தது.
 
இந்நிலையில், உலகின் பிரதான பொருளாதார மற்றும் இராணுவ சக்தியாக சீனா மாறியுள்ளதுடன் தெற்காசிய பிராந்தியத்தில் சீனா அதனை விஸ்தரித்துக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த செயற்பாடு பாரம்பரிய எதிரி மனப்பான்மையுடன் கூடிய இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான உறவுகளில் மேலும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்படி பூகோள அரசியல் மற்றும் பூகோள நிலைப்பாட்டு போட்டியில் அமெரிக்காவின் இந்து சமுத்திர பிரதேசம் தொடர்பான அக்கறை நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.
 
தற்போதைய சர்வதேச முறைமையானது முன்னரைப் போல் நாட்டை மையப்படுத்திய முறைமை அல்ல. அது நாட்டில் உள்ள சக்திகளுடன் அரச சார்பற்ற வெளிநாட்டு தொண்டர் அமைப்புகளும் இணைந்து செயற்படும் முறைமையே தற்போது செயற்படுகிறது. அத்துடன் உலக மயப்படுத்தப்பட்ட சக்திகள் தேசிய எல்லைகளுக்கூடாக செயற்படுகின்றன.
 
இந்துசமுத்திர பிரதேசமும் மேற்கு பசுபிக் சமுத்திர பிரதேசமும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் பூகோள கொள்கைப் போட்டியில் பிரதான மையங்களாக மாறியுள்ளன. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்தப் போட்டியில் உள்ளன. இதில் சீனா அதன் பட்டு மற்றும் வீதி திட்டத்தின் மூலம் முன்னணியில் உள்ளது. சீனாவின் முன்னேற்றத்தைக் தடுக்கும் முயற்சியில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.
 
மேற்படி சம்பிரதாய ஆபத்துகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அப்பால் மேலும் பல அச்சுறுத்தல்களும் உள்ளன. விடுதலைப் பிரிவினைவாத கிளர்ச்சி அமைப்புகள், கடற் கொள்ளையர்கள், ஆயுதங்கள், போதைவஸ்து மற்றும் ஆட்கடத்தல்காரர்கள், சட்டவிரோத மீன்பிடித்தல், காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் கடல்மட்ட உயர்வு, ஆகியவை இந்து சமுத்திர பிரதேசத்தில் உள்ள ஏனைய ஆபத்து மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகும்.
 
இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் சூழல் கடந்த சில தசாப்தங்களாக சில முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார சக்தியான சீனா காரணமாகிறது. இந்து சமுத்திர பிரதேசத்தில் அமெரிக்காவின் நட்புநாடாக இருந்த பாகிஸ்தான் இப்போது சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. முன்னர் அமெரிக்காவுடன் போட்டியிட்ட மற்றொரு வல்லரசான ரஷ்யா இப்போது இந்தியாவின் நட்பு நாடாக உள்ளது. அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை குறைக்க இந்தியாவும் ரஷ்யாவும் கைகோர்த்துள்ளன. இவ்வாறான மாறுதல் நிலைப்பாடுகள் இந்து சமுத்திர பிரதேசத்தில் அதிகார சமன்பாட்டை மாற்றியுள்ளன.
 
பனிப்போர் காலத்தில் இலங்கையின் இறைமைக்கு பாரதூரமான அச்சுறுத்தல்கள் எதுவும் இருக்கவில்லை. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து எப்போதாவது வரும் இராஜதந்திர அழுத்தங்களைத் தவிர.
 
எனினும் பிரிவினை மோதல்களின் போதும் அதற்குப் பின்னரும் அவ்வாறான அழுத்தங்கள் தொடர்ந்தன. அத்துடன் அரச சார்பற்ற அமைப்புகளின் பங்குபற்றுதலும் இது போன்ற அழுத்தங்களை ஏற்படுத்தியது.
 
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு இளைஞர் கிளர்ச்சிகள் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருந்தன. 1971 முதல் 1989 வரை தென்பகுதி இளைஞர்களின் கிளர்ச்சியும் 1976 முதல் 2009 வரை வடபகுதி இளைஞர்களின் பிரிவினைவாத போராட்டமும் இடம்பெற்றன. இந்த கிளர்ச்சிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த போதிலும், பெருமளவிலான உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை தவிர்க்க முடியவில்லை.
 
இதுபோன்ற இளைஞர் கிளர்ச்சி எதிர்காலத்தில் ஏற்படும் சாத்தியம் மிகவும் குறைவு எனினும் அவ்வாறு ஏற்படக் கூடிய கிளர்ச்சிகளை முறியடிக்க அரசாங்கம் தயார் நிலையில் இருக்க வேண்டியது முக்கியமும் அவசியமுமாகும். அதேபோல் ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் அரசுக்கு விடுக்கப்பட்ட பாரதூரமான அச்சுறுத்தல் ஆகும். அதுபோன்று இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவது தடுக்கப்பட வேண்டும்.
 
இவ்வாறான தாக்குதல் இடம்பெறுமென இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறான தாக்குதலுக்கு சர்வதேச ரீதியில் நிதி பயன்படுத்தப்பட்டதற்கான உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. எனினும் பாதுகாப்பு தொடர்பான அதிகார சக்திகள் இவ்வாறான அச்சுறுத்தல் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
 
நன்றி - தினகரன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்