மதுரை - யாழ்ப்பாணம் இடையில் ஆரம்பமாகும் விமான சேவை!

20 ஆடி 2023 வியாழன் 06:50 | பார்வைகள் : 10330
மதுரை - யாழ்ப்பாணம் இடையில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
விரைவில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமான சேவைகள் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை - கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.