Paristamil Navigation Paristamil advert login

சிறிலங்காவை தலைகுனிய வைத்த மேர்வின் சில்வா!

சிறிலங்காவை தலைகுனிய வைத்த மேர்வின் சில்வா!

9 புரட்டாசி 2013 திங்கள் 19:13 | பார்வைகள் : 10181


ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை விமர்சிக்க முற்பட்டதன் விளைவை அரசாங்கம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, அமைச்சர் மேர்வின் சில்வா விவகாரத்தில், அரசாங்கம் மன்னிப்புக் கோருகின்ற அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது.

நவநீதம்பிள்ளையை பக்கசார்பானவர் என்று ஒரு பக்கம் விமர்சித்துக் கொண்டே, அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை வரும் என்று அரசாங்கம் நினைத்துக் கூடப் பார்த்திருக்காது.

ஐ.நா மற்றும் மேற்குலகப் பிரமுகர்களை மோசமாக விமர்சிப்பது இலங்கையில் உள்ள அமைச்சர்களின் வழக்கம் தான்.

ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்பட்ட போது, அதைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ஸ உண்ணாவிரதமிருந்தார்.

அது அர­சாங்­கத்­துக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­திய போது, அந்த உண்­ணா­வி­ர­தத்தை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவே முடித்து வைத்தார்.

போர்­நி­றுத்த காலத்தில், நோர்வே தூது­வர்­களை புலி­களின் ஏஜென்ட் என்று விமர்­சித்தும், புலி­களின் சீரு­டை­யுடன் சுவ­ரொட்­டி­களை ஒட்­டியும் குழப்­பங்­களை விளை­வித்த சம்­ப­வங்­களின் பின்­னாலும் விமல் வீர­வன்ஸ போன்­ற­வர்கள் இருந்­தனர்.

இலங்­கைக்கு எதி­ரான ஜெனீவாவில் அமெ­ரிக்கா தீர்­மானம் கொண்டு வந்த போது, அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மா­வுக்கு, செருப்பு மாலை அணி­வித்து அவ­ம­ரி­யாதை செய்­யப்­பட்ட ஒரு பேர­ணிக்கு வெளி­விவகாரத் துணை அமைச்சர் ஒரு­வரே தலைமை தாங்­கி­யி­ருந்தார்.

இலங்கை அர­சுக்கு எதி­ராக யார் யாரெல்லாம் கருத்து வெளி­யி­டு­கின்­ற­னரோ, அவர்­க­ளை­யெல்லாம் புலிகள் என்று விமர்­சிப்­பதும், புலி­க­ளிடம் பணம் வாங்­கு­வ­தாக, குற்­றஞ்­சாட்­டு­வதும், இழி­வான வகையில் கருத்­து­களை வெளி­யி­டு­வதும் சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு கைவந்த கலை.

அவர்­களில் அமைச்­சர்கள் கூட விதி­வி­லக்­கா­ன­வர்கள் இல்லை.

அர­சாங்­கத்­துக்கு எதி­ராக வரு­கின்ற விமர்­ச­னங்கள், கருத்­துகள், சிங்­கள மக்­க­ளி­டத்தில், தமக்கு எதி­ரான உணர்வைத் தோற்­று­வித்து விடக் கூடாது என்­ப­தற்­காக, அத்­த­கைய கருத்­துகள், குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­வர்­களை கேவ­லப்­ப­டுத்­து­வது அல்­லது குற்­ற­வா­ளி­க­ளாக அறி­முகம் செய்­வது ஆளும்­த­ரப்பு அர­சி­யல்­வா­தி­களின் தந்­தி­ர­மாக உள்­ளது.

இலங்­கையில் பல கால­மா­கவே இந்த தந்­தி­ரோ­பாயம் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கி­றது.

இத்­த­கைய கேவ­லப்­ப­டுத்­தல்­க­ளுக்­காக, தாம் கைதட்­டல்­களை வாங்­கு­வ­தற்­காக எத்­த­கைய மோச­மான பழி­க­ளையும் சுமத்த இவர்கள் அஞ்­சு­வ­தில்லை.

அதுவும், தமக்கு எதி­ராக கருத்து வெளி­யி­டு­ப­வர்கள் எந்த நாட்டின் எத்­த­கைய உயர் பிர­மு­க­ராக - மதிப்­புக்­கு­ரி­ய­வ­ராக இருந்­தாலும், அவர்­க­ளுக்குப் புலி முத்­திரை குத்தி விமர்­சிப்­பதில் சிங்­கள அர­சியல் தலை­மை­க­ளுக்கு அலா­தி­யான பிரியம்.

இவ்­வாறு தான், நவ­நீ­தம்­பிள்­ளை­யையும் பெண் புலி என்றும், புலி­க­ளிடம் பணம் வாங்­கு­பவர் என்றும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

அதை­யெல்லாம் அவர் அவ்­வ­ள­வாக கண்­டு­கொள்­ள­வில்லை.

இதற்­கெல்லாம் ஒரு படி மேலே போய், மஹ­ர­க­மவில் பௌத்த பிக்­குகள் மத்­தியில் உரை­யாற்­றிய அமைச்சர் மேர்வின் சில்வா, நவ­நீ­தம்­பிள்­ளையை திரு­மணம் செய்து கொண்டு, இலங்­கையை சுற்றிக் காட்டத் தயா­ராக இருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

முஸ்­லிம்கள் 4 திரு­ம­ணங்­களை செய்யும் போது, தாமும் அவ்­வாறு செய்தால் என்ன என்றும் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

இதே மேர்வின் சில்வா, சில வாரங்­க­ளுக்கு முன்னர் யாழ்ப்­பாணம் சென்று, ஆளும்­கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்­காக பிர­சாரம் செய்த போதும், யாழ்ப்­பாணப் பெண்ணைத் திரு­மணம் செய்யப் போவ­தாக கூறியிருந்தார்.

அதை அப்­போது யாரும் பெரி­தாக எடுத்துக் கொள்­ள­வில்லை.

ஏனென்றால், அவர் தனிப்­பட்ட ஒரு­வரை சுட்­டிக்­காட்­ட­வில்லை.

ஆனால் நவ­நீ­தம்­பிள்ளை விட­யத்தில் அவ்­வாறு இருக்­க­வில்லை.

நவ­நீ­தம்­பிள்­ளையின் வயது, அவர் வகிக்கும் கௌரவம் மிக்க பதவி எல்­லா­வற்­றுக்கும் அப்பால், திரு­ம­ண­மான ஒரு பெண்­ணாக இருந்த போதே, மேர்வின் சில்வா அவரைக் கேவ­லப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இந்த ஒரு விட­யமே, நவ­நீ­தம்­பிள்­ளைக்கு மட்­டு­மன்றி, உல­கத்­துக்கே, இலங்­கை அமைச்­சர்­களின் புகழை எடுத்துச் சென்­றி­ருந்­தது. மேர்வின் சில்­வாவின் கருத்து, நவ­நீ­தம்­பிள்­ளைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்­தி­யி­ருந்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை.

ஏனென்றால், இதை சாதா­ர­ண­மா­ன­தொன்­றாக கருதி ஒதுக்கித் தள்ள, அவர் ஒன்றும் மேற்கு நாட்டுப் பெண் அல்ல.

தென்­னா­பி­ரிக்­காவில் பிறந்­தவர் என்­றாலும், அவர் தமிழ் கலா­சார விழு­மி­யங்­களைப் பின்­பற்­று­பவர்.

ஒரு குடும்பப் பெண்ணைத் திரு­மணம் செய்ய விரும்­பு­வ­தாக, வெளிப்­ப­டை­யாக கூறும் ஒரு­வரை, தமிழ்ச் சமூகம், எந்­த­ள­வுக்கு கேவ­ல­மாக மதிக்கும் என்று கூற­வேண்­டி­ய­தில்லை.சிங்­கள சமூகம் கூட இதனை இர­சிக்­க­வில்லை.

ஆனால், அமைச்சர் மேர்வின் சில்வா இந் தக் கருத்­துக்­காக வெட்­கப்­ப­ட­வில்லை. மன்­னிப்பும் கேட்­க­வில்லை.

தான் இதற்­காக மன்­னிப்புக் கேட்கப் போவ­தில்லை என்றும் கூறி­யுள்ளார்.

அர­சாங்­கத்தின் சார்பில், அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வாவே, நவ­நீ­தம்­பிள்­ளை­யிடம் மன்­னிப்புக் கோரி­யி­ருந்தார்.

பின்னர், அமைச்­சர்­களின் சார்பில் மேர் வின் சில்­வாவின் கருத்­துக்­காக மன்­னிப்புக் கோரு­வ­தாக, அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும செய்­தி­யாளர் சந்­திப்பில் கூறி­யி­ருந்தார்.

இலங்கை தொடர்­பாக, நவ­நீ­தம்­பிள்ளை வெளி­யிட்ட கருத்­துகள், கண்­ட­னங்கள், குற்­றச்­சாட்­டுகள் அனைத்­துக்கும் அர­சாங்­கமே காரணம்.

அர­சாங்கத் தரப்­பினர் வெளி­யிட்ட கருத்­துகள், நடந்து கொண்ட முறைகள் என்­பன தான், அவரை இவ்­வாறு கருத வைத்­தன.

இலங்­கையில் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் குறித்தும் நவ­நீ­தம்­பிள்ளை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அவர் அந்தக் குற்­றச்­சாட்­டுக்கு வேறு யாரையும் ஆதாரம் காட்ட வேண்­டி­ய­தில்லை.

ஏனென்றால், அவ­ருக்கு எதி­ரா­கவே அத்­த­கைய இழி­வு­ப­டுத்­தலை மேர்வின் சில்வா மேற்­கொண்­டி­ருந்தார்.

இதுவும் ஒரு பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையின் வடி­வ­மாக இருக்கும் நிலையில், சாதா­ரண மக்கள் எதிர்­கொள்ளும் நிலை­யையும், அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­களின் மனோ­நி­லை­யையும் அவரால் தெளிவாக உணர்ந்­தி­ருக்க முடியும்.

மேர்வின் சில்­வாவை வைத்து நவ­நீ­தம்­பிள்­ளையை அவ­மா­னப்­ப­டுத்தப் போய், கடை­சியில் அர­சாங்­கமே வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.

பெண்களின் உரிமைகளுக்கு அரசாங்கமே சவாலாக இருக்கிறது என்ற கருத்து இப்போது ஐ.நா வரை சென்றுள்ளது என்றால், அதற்குக் காரணம் இந்த அரசாங்கம் தான்.

அமைச்சர்களைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணத்திற்குப் போய் இப்படி கூறுவது ஒரு வழக்கமாகி விட்டது.

அமைச்சர்கள் மகிந்தானந்த அழுத்கமகே, டலஸ் அழகப்பெரும, மேர்வின் சில்வா என்று பலரும் யாழ்ப்பாணத்தில் பெண் பார்க்கப் போவதாகக் கூறி கிண்டலடித்தவர்கள் தான்.

இந்த அமைச்சர்களின் வாயை ஆரம்பத்திலேயே அடக்கத் தவறியதன் விளைவால் தான், நவநீதம்பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் வந்து நிற்கிறது.

- கபில்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்