ஐரோப்பாவில் பதிவான கடுமையான வெப்பம்- அதிக எண்ணிக்கையிலான மக்கள் பலி
11 ஆடி 2023 செவ்வாய் 05:20 | பார்வைகள் : 8956
ஐரோப்பாவில் வழக்கத்திற்கு மாறாக கடுமையாக கோடை காலத்தில் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த கோடை காலத்தில் மட்டும் வெப்ப அலைக்கு 61,000 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறப்பதைக் கண்ட பிறகு, ஐரோப்பிய ஒன்றிய புள்ளியியல் வல்லுநர்கள் ஓகஸ்ட் மாதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடுமையான வெப்பம், வாட்டும் வறட்சி மற்றும் பற்றியெரியும் தீ ஆகியவை ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தன.
இந்த நிலையில், பொது சுகாதார நிபுணர்கள் தரப்பு முன்னெடுத்த ஆய்வில், 2022 மே 30 முதல் செப்டம்பர் 4 ஆம் திகதி வரை ஐரோப்பாவில் வெப்பம் தொடர்பான காரணங்களால் 61,672 பேர் இறந்துள்ளதை கண்டறிந்தனர்.
மட்டுமின்றி, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது என்பதையும் கண்டறிந்தனர்.
மேலும், அதிக வெப்பம் பதிவான ஜூலை 18 முதல் 25 வரையில், மொத்தமாக 11,637 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட வயதான பெண்கள் புவி வெப்பமடைவதைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக பெடரல் அரசாங்கத்திற்கு எதிராக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.