கனடாவின் இந்தப் பகுதியல் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!
9 புரட்டாசி 2023 சனி 09:11 | பார்வைகள் : 16239
கடந்த காலங்களில் கொரோனா தொற்றானது பாரிய அச்சுறுத்தலை உலக நாடுகளில் ஏற்படுத்தி இருந்தது.
தற்பொழுது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வான்கூவாரில் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் தற்போதைக்கு தொற்று பரவுகை நிலைமையாக பிரகடனம் செய்ய முடியாது என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வேறு நோய்களுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வேறும் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நோய்த் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan