கனடாவில் பயங்கர நோய்க்கிருமி பரவல்... குழந்தைகளுக்கு காத்திருக்கும் அபாயம்
9 புரட்டாசி 2023 சனி 11:10 | பார்வைகள் : 5071
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில் அமைந்துள்ள பல குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் 142 குழந்தைகளுக்கு, ஈ கோலை என்னும் பயங்கர கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அவர்களில் 26 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் சில குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுநீரகம் பாதிக்கப்படும்போதுதான் இந்த டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு முக்கிய விடயம், இந்த காப்பகங்களில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், ஒரே சமையலறையிலிருந்துதான் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.
எதனால் குழந்தைகளுக்கு இந்த நோய்த்தொற்று என சுகாதார அதிகாரிகள் கூறாவிட்டாலும், அந்தக் குழந்தைகள் அனைவரும் ஒரே சமையலறையில் இருந்து விநியோகிக்கப்படும் உணவை உண்டதால் அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
அதாவது, உணவின்மூலம் இந்த நோய்க்கிருமிகள் பரவியிருக்கலாம்.
ஈ கோலை என்னும் கிருமியே தற்போது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மூன்று குறிப்பிட்ட நேரங்களில், கிருமிநீக்கம் செய்யும் Lifebuoy போன்றதொரு சோப்பினால் கைகளை கழுவுவது, நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கும். ஒன்று கழிவறைக்குச் சென்று திரும்பியபின், இரண்டு, வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பியபின், மூன்று சமையல் செய்யும் முன்...
இப்படி கைகளைக் கழுவுவதால் குறிப்பிட்ட அளவுக்கு உணவின் மூலம் பரவும் சில தொற்றுக்களைத் தவிர்க்கலாம்.
இந்த ஈ கோலை என்னும் கிருமியிலேயே பல பிரிவுகள் உள்ளன.
நச்சுப்பொருளை உருவாக்கும் ஈ கோலை, குடலில் இரத்தம் வரவைக்கும் ஈ கோலை, குடலில் நோயுண்டாக்கும் ஈ கோலை, குடலின் தோலுக்குள்ளேயே நுழையக்கூடிய ஈ கோலை என்னும் பல வகை ஈ கோலைகள் உள்ளன.
பல ஈ கோலை கிருமிகள், மலம் கழித்துவிட்டு சரியாக கை கழுவாததால் பரவ வாய்ப்புள்ளது.
இப்படிப்பட்ட ஈ கோலையில், முதல் வகையான நச்சுப்பொருள் உருவாக்கும் ஈ கோலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளே தற்போது டயாலிசிஸ் செய்யும் நிலைக்குச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.