ஐரோப்பிய நட்சத்திர வீரர் திடீர் மரணம்

9 புரட்டாசி 2023 சனி 11:35 | பார்வைகள் : 7553
மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் முக்கிய வீரரான Violeta Mitul விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் மொத்த கால்பந்து ரசிகர்களையும் கண் கலங்க வைத்துள்ளது.
மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையான 26 வயது Violeta Mitul தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் திகதி தமது சக கால்பந்து வீராங்கனை ஒருவருடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பில் கால்பந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எங்கள் வீரர், சக வீரர் மற்றும் நண்பரின் திடீர் மரணத்தை எங்கள் இதயங்களில் ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
ஐஸ்லாந்து பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், Vopnafjörður இல் உள்ள மெரினாவில் பெண் ஒருவர் மலை முகட்டில் இருந்து தவறி விழுந்தார் என்ற தகவல் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் சம்பவம் நடந்த பகுதிக்கு அவசர மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்த நிலையில் அவர் மரணமடைந்திருந்தார் என்றே கூறப்படுகிறது.
26 வயதேயான Violeta Mitul ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்றே கூறுகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1